G.O.A.T அப்டேட் | அதிக சத்தத்துடன் படமாக்கப்பட்ட கார் வெடிக்கும் காட்சிகள்... மக்கள் அச்சம்!

புதுச்சேரியில் கார் வெடித்து சிதறுவது போன்ற கோட் திரைப்படத்தின் சண்டை காட்சிகள் நள்ளிரவில் எடுக்கப்பட்டது.
கோட் மூவி அப்டேட்
கோட் மூவி அப்டேட்புதிய தலைமுறை

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில், நடிகர் விஜய் நடிக்கும் கோட் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது. இந்நிலையில் சண்டை காட்சிகள் குறித்த படப்பிடிப்பு தற்போது புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது. இதில் புதுச்சேரி பழைய துறைமுக வளாகத்தில் நடைபெற்ற சண்டை காட்சியில் ஒரு கார் மற்றொரு கார் மீது விழுவது போன்று நேற்று ஒரு காட்சி படமாக்கப்பட்டது.

அப்போது அருகில் இருந்த மக்கள் திடுக்கிடும் அளவிற்கு சத்தம் கேட்டுள்ளது. அதேபோல் கிழக்கு கடற்கரை சாலையில், கார் வெடித்து சிதறித் தீப்பற்றி எறிவது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டன.

கோட் மூவி அப்டேட்
Good Bad Ugly படத்தின் அடுத்த அப்டேட்.. G.O.A.T வரிசையில் படக்குழு செய்யப்போகும் விஷயம்?

இதற்காக நள்ளிரவில் சாலைகளை பிளாக் செய்த படக் குழுவினர், வாகன ஓட்டிகளை ஆங்காங்கே நிறுத்தி படக் காட்சிகளை எடுத்தனர். இந்நிலையில் இதுபோன்ற படப்பிடிப்பு நடக்கும் முன், அதுதொடர்பாக முன்னறிவிப்பு இருந்திருக்க வேண்டும் என பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை எழுந்துள்ளது.

திடீரென எடுக்கப்பட்ட இக்காட்சிகள், மக்களை அச்சத்துக்குள்ளாக்கியது. இதற்கிடையே படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட அந்த சண்டைக் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அதை கீழே இணைக்கப்பட்டுள்ள லிங்க்-ல் காணலாம்...

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com