Good Bad Ugly படத்தின் அடுத்த அப்டேட்.. G.O.A.T வரிசையில் படக்குழு செய்யப்போகும் விஷயம்?

நடிகர் அஜித் குமார் நடிக்கும் குட் பேட் அக்லி (Good Bad Ugly) திரைப்படத்தின் படப்பிடிப்பு ரஷ்யாவில் தொடர உள்ளதாகக் கூறப்படுகிறது.
குட் பேட் அக்லி
குட் பேட் அக்லிமுகநூல்

மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு பின், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும், குட் பேட் அக்லி (Good Bad Ugly) படத்தில் இணைந்துள்ளார்.

இதன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் கவனம் பெற்றதுடன், படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு படம் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

Good Bad Ugly Poster
Good Bad Ugly Poster

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் அஜித் சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

குட் பேட் அக்லி
உலக சினிமா அரங்கில் இந்தியாவிற்காக புன்னகைக்கும் திரை தேவதைகள்!

இந்நிலையில் ஐதராபாத்தில் படப்பிடிப்பு முடிந்ததும், அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் துவங்கும் எனக் கூறப்படுகிறது. அங்கு, அஜித்தின் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்னொருபக்கம், நடிகர் விஜய் இப்போது வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் 'தி கிரேடஸ்ட் ஆஃப் ஆல் டைம்' படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருடன் பிரபுதேவா, மோகன், ஜெயராம், சினேகா, பிரஷாந்த், அஜ்மல், மீனாட்சி சௌத்ரி எனப் பலரும் நடித்து வருகிறார்கள்.

goat vijay
goat vijaypt

இதில் விஜய் உட்பட படக்குழுவினர் அனைவரும் ரஷ்யாவில் பல நாட்கள் தங்கியிருந்து, அங்கு படப்பிடிப்பு நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. அச்சமயத்தில் அங்கு நடிகர் விஜய் ஜாலியாக விளையாடிக் கொண்டிருந்த வீடியோவை பகிர்ந்து அப்படத்தின் தயாரிப்பாளர்கள் அர்ச்சனா மற்றும் ஐஸ்வர்யா கல்பாத்தி இன்ஸ்டாவில் மகிழ்ந்திருந்தனர். இந்நிலையில், இந்த வரிசையில் தற்போது அஜித் படமும் ரஷ்யாவில் படமாக்கப்படுவது, ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com