LEO Success Meet-ல் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி இந்த திருக்குறளா?

நடிகர் விஜய் நேற்று சொன்ன குட்டி கதை, திருவள்ளுவரின் ஒரு குறிப்பிட்ட குறளோடு ஒத்துப்போகிறது. அதுபற்றி பார்க்கலாம்.
லியோ வெற்றி விழா
லியோ வெற்றி விழாமுகநூல்

கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகி 12 நாட்களில் 540 கோடி ரூபாய் வசூல் செய்து வணிகரீதியாக சாதனை படைத்துள்ளது நடிகர் விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம்.

நடிகர் விஜய்யின் புதிய திரைப்படம் வெளியாக போகிறது என்றாலே ரசிகர்களால் பெரிதும் எதிர்ப்பார்க்கப்படுவது அவர் ஆடியோ லான்ச்சில் கூறும் குட்டி கதைதான்.

லியோ வெற்றி விழா
லியோ வெற்றி விழாபுதிய தலைமுறை

ஆனால் அதற்கு இந்த முறை வாய்ப்பு இல்லாமல் போனது, விஜய் ரசிகர்களை மிகவும் ஏமாற்றமடைய செய்தது. அந்த வகையில், ஏமாற்ற அடைந்த ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக படத்தின் வெற்றி விழாவை அறிவித்திருந்தது படக்குழு.

லியோ வெற்றி விழா
லியோ ஆடியோ லான்ச் ரத்து.. புலம்பும் விஜய் ஃபேன்ஸ்.. காக்கா கழுகு கதைதான் காரணமா? கசிந்த ரகசியம்..!

“அப்போ கட்டாயம் குட்டி ஸ்டோரியும் இருக்கும்தானே?” எனக்கூறி எதிர்பார்ப்பை எகிறவைத்தது தயாரிப்பு நிறுவனம். பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் லியோ பட வெற்றி விழாவானது நேற்று நடைபெற்றது.

நடிகர் விஜய், இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், நடிகை த்ரிஷா, நடிகர் அர்ஜூன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். ரசிகர்கள் எதிர்பார்த்தது போலவே, விழாவில் விஜய் குட்டி கதையும் கூறினார்.

விஜய்யின் அந்தக் குட்டி கதை இதுதான்:

“ஒரு காட்டுக்கு இரண்டு பேர் வேட்டைக்கு சென்றனர். அந்த காட்டில் யானை, மயில், இந்த காக்கா, கழுகு... காடு என்றால் இதெல்லாம் இருக்க வேண்டும் என்பதால் கூறினேன். அந்த காட்டுக்கு சென்ற இரண்டு வேட்டைக்காரர்களில் வில்-அம்பு ஒருவர் எடுத்து சென்றார், ஒருவர் ஈட்டி எடுத்து சென்றார்.

வில்-அம்பு எடுத்துச்சென்றவர் முயலை வேட்டையாடி எடுத்து சென்றார். ஈட்டி எடுத்து சென்றவர் யானையை வேட்டையாட நினைத்து எதுவும் இல்லாமல் வீட்டுக்கு சென்றார். இதில் யார் வெற்றிபெற்றவர்?

யானையை வேட்டையாட நினைத்தவர்தான் வெற்றியாளர். ஏனெனில் அவர்தான் இலக்கு பெரிதாக கொண்டவர். உங்கள் இலக்கை பெரிதாக வைத்து அதையை நோக்கி நாம் செல்ல வேண்டும்.. பாரதியார் சொல்வது போல் பெரிதினும் பெரிது கேள்.. பெரிதாக கனவு காணுங்கள். Small aim is crime என கலாம் கூறியுள்ளார். எனவே பெரிதாக கனவு காணுங்கள்”

இந்த கதை, திருவள்ளுவரின் ஒரு குறிப்பிட்ட குறளோடு ஒத்துப்போகிறது.

அந்தக் குறள்:

குறள்
குறள்முகநூல்

அதிகாரம் - படைச்செருக்கு

குறள் -

’கான முயல்எய்த அம்பினில் யானை

பிழைத்தவேல் ஏந்தல் இனிது’

பொருள் - வலிமை குறைவாக இருக்கும் முயலை குறிவைத்து அதனை வீழ்த்துவதை காட்டிலும், வலிமை மிகுந்த யானைக்கு குறிவைத்து, அந்தக்குறி தப்பினாலும்கூட அதில் பெரிய தவறொன்றும் இல்லை.

விஜய் கூறி இருக்கும் குட்டி ஸ்டோரியும் இந்த பொருளைதான் தருகிறது!

என்னதான் தொடர்பு? 

ஆக மொத்தத்தில் குட்டி கதையும் திருக்குறளும் சொல்லவருவது - “உங்களுடைய இலக்கு பெரிதாக இருக்கட்டும்... அந்த இலக்கில் முயல் போன்ற சிறிய இலக்கினை குறிவைத்து வெற்றி பெறுவதை விட யானை போன்ற பெரிய இலக்கினை குறிவைத்து தோல்வியே அடைந்தாலும் அதில் தவறு ஒன்றும் இல்லை. யானையை குறிவைத்தவரே வெற்றியாளராக கருதப்படுவார். ஏனெனில் அந்த இலக்கு பெரியதே”

லியோ வெற்றி விழா
”ஒரு மகன் அப்பாவோட சட்டை, வாட்ச் அணிய ஆசைபடுவான்” - விஜய் பேச்சும் எழுந்த கண்டன குரலும்!

திருக்குறளையும் விஜய்யின் குட்டி ஸ்டோரியையும் ஒப்பிட்டு, X வலைதளத்தில் இணையவாசிகளும் கருத்து தெரிவித்துவருகின்றனர். இதில் உங்கள் கருத்து என்ன? கமெண்ட் பண்ணுங்க!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com