”ஒரு மகன் அப்பாவோட சட்டை, வாட்ச் அணிய ஆசைபடுவான்” - விஜய் பேச்சும் எழுந்த கண்டன குரலும்!

சென்னையில் லியோ பட வெற்றி விழா நடைபெற்றது. இதில் நடிகர் விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டு பேசினர். விஜய் பேசியதன் விவரத்தை பார்க்கலாம்.
vijay leo speech
vijay leo speechTwitter

குட்டிக் கதை:

குட்டிக்கதையை கூறிய விஜய், “ஒரு காட்டுக்கு இரண்டு பேர் வேட்டைக்கு சென்றனர். அந்த காட்டில் யானை, மயில் இந்த காக்கா, கழுகு ....என்று கூறியவுடன் அரங்கமே சத்தத்தால் அதிர ஆரம்பித்தது. பின்னர் தொடர்ந்த விஜய், ”காடு என்றால் இதெல்லாம் இருக்க வேண்டும் என்பதால் கூறினேன். காட்டுக்கு சென்ற இரண்டு வேட்டைக்காரர்களில் வில்-அம்பு ஒருவர் எடுத்து சென்றார், ஒருவர் ஈட்டி எடுத்து சென்றார். வில்-அம்பு எடுத்துச்சென்றவர் முயலை வேட்டையாடி எடுத்து சென்றார். ஈட்டி எடுத்து சென்றவர் யானையை வேட்டையாட நினைத்து எதுவும் இல்லாமல் வீட்டுக்கு சென்றார். இதில் யார் வெற்றிபெற்றவர்?

vijay
vijayTwitter

யானையை வேட்டையாட நினைத்தவர்தான் வெற்றியாளர். உங்கள் இலக்கை பெரிதாக வைத்து அதையை நோக்கி நாம் செல்ல வேண்டும்.. பாரதியார் சொல்வது போல் பெரிதும் பெரிது கேள்.. பெரிதாக கனவு காணுங்கள். “Small aim is crime” என கலாம் கூறியுள்ளார். எனவே பெரிதாக கனவு காணுங்கள்.” என குட்டிக்கதை மூலம் கூறியுள்ளார் விஜய்.

பாடல் வரி சர்ச்சை குறித்து

“ஒரு பாடல் பிரச்சினை ஏற்பட்டது. விரல் இடுக்கில் தீ பந்தம் என்றால் ஏன் நீங்கள் அதை பேனாவாக நினைக்க கூடாது. இதுபோன்று ஒரு மழுப்பலான காரணம் கூறி என்னால் செல்ல முடியும். ஆனால் நான் அதை செய்ய விரும்பவில்லை. சினிமாவை சினிமாவாக பாருங்கள், உலகம் முழுக்க சினிமாவை அப்படிதான் பார்க்கிறார்கள்.

leo dancers
leo dancersfile image

பள்ளி அருகே நிறைய wine shop உள்ளது. அதற்காக மாணவர்கள் wine shop-ற்கா செல்கிறார்கள் படிக்கதானே செல்கிறார்கள்.

அவர்கள் மிக தெளிவாக உள்ளனர், என் மீது இவ்வளவு அன்பு வைத்திருக்கும் இவர்களே என் படம் பிடிக்கவில்லை என்றால் பிடிக்கவில்லை என கூறி செல்கின்றனர். மக்கள் தெளிவாக உள்ளனர்.” என தெரிவித்துள்ளார்.

லோகேஷ் குறித்து

Lokesh-Vijay
Lokesh-Vijay

”மாநகரத்தில் திரும்பி பார்க்க வைத்தார். கைதியில் திரும்ப திரும்ப பார்க்க வைத்தார். மாஸ்டர், விக்ரமை இந்தியாவையே திரும்ப பார்க்க வைத்தார். லியோவை.. இன்னும் ஹாலிவுட் தான் மிச்சம் இருக்கிறது” என்று லோகேஷ் குறித்து பேசினார்.

த்ரிஷா குறித்து

leo Success Meet
leo Success Meet

”20 வயசுல ஒரு பொண்ணு ஹீரோயின் ஆவதற்கு விஷயம் இல்ல. 20 வருஷமாகவே ஹீரோயினா தக்க வைக்கிறது இருக்கே.. அதுவும் அதே எனர்ஜியோட! அது யாரு நம்ம இளவரசி குந்தவை தான்” என புகழ்ந்தார் விஜய்.

அப்பா - மகன் சட்டை பேச்சு

ஒரு குட்டிப் பையன் ஆசையா அவங்க அப்பா சட்டைய எடுத்து போட்டுக்குவான். அப்பாவோட வாட்ச் எடுத்து கட்டிக்குவான். அப்பாவோட சேர்ரில் ஏறி உட்கார்ந்துக்குவான். அந்த ஷர்ட் அவனுக்கு செட்டே ஆகாது. தொள தொளனு இருக்கும். வாட்ச் கையிலயே இருக்காது. அந்த சேர்ல உட்காரலாமா வேணாமா? தகுதி இருக்கா, இல்லையா? அதெல்லாம் அவனுக்கு தெரியாது. அப்பா சட்டை. அப்பா மாறி ஆகணும்னு கனவு. அதில் என்ன தவறு. அதனால, பெருசா கனவு காணலாம். ஒருத்தரும் ஒன்னும் பண்ண முடியாது! ” என்று நடிகர் விஜய் பேசினார்.

Vijay
Vijay

இந்த பேச்சு சமூக வலைதளங்களில் ஒருபுறம் வைரலாகி வரும் நிலையில், ஆடியோ லாஞ்ச் நடைபெறும் நேரு உள்விளையாட்டுக்கு வெளியே சிலர் எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பினர். அதாவது விஜய் அப்பா - மகன் என்று ஆளும் அரசாங்கத்தை குறித்து பேசியதாக அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சிறிது நேரம் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.

ரசிகர்களுக்கு அட்வைஸ்

கொஞ்ச நாளா சோஷியல்மீடியால உங்க கோவம்லா அதிகமா இருக்கே. ஏன்?. அதெல்லாம் வேணாம். இவ்ளோ கோவம்லாம் உடம்புக்கு நல்லதில்ல. நமக்கு நிறைய வேலை இருக்கு” என்று ரசிகர்களுக்கு விஜய் அட்வைஸ் கொடுத்தார். அதேபோல், படத்தில் காட்டப்படுவது போல் தீய பழக்கங்களை நீங்கள் நிச்சயம் கடைபிடிக்கமாட்டீர்கள் என நம்புகிறேன் என நம்பிக்கையுடன் சொன்னார்.

”எந்த எதிர்பார்ப்புமே இல்லாம என் மேல நீங்க வச்சிருக்க இந்த அன்புக்கு நான் திருப்பி என்ன செய்யப் போறேன்.

என் உடம்பு தோல உங்க காலுக்கு செருப்பா தச்சு போட்டாலும் போதாது. சாகும் வரை உங்களுக்கு உண்மையாக இருப்பேன்” என்று” ரசிகர்கள் மத்தியில் விஜய் உருக்கமாக பேசினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com