mysskin
mysskinpt web

Maaveeran | “அந்த ஒரு விஷயத்திற்காகவே... சிவாவுக்கு சாபம் விடுகிறேன்”- மிஷ்கின் நெகிழ்ச்சி

மாவீரன் திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நிகழ்வில் சிவகார்த்திகேயன் இன்னும் 40 முதல் 50 ஆண்டுகள் சினிமாவில் இருக்க சாபம் விடுவதாக இயக்குநர் மிஷ்கின் கூறியுள்ளார்.
Published on

சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் நடிப்பில் மடோன் அஷ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாவீரன். இத்திரைப்படம் வரும் 14 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் திரைப்படக் குழுவினர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

mysskin
mysskin

அப்போது இப்படத்தில் வில்லனாக நடித்துள்ள இயக்குநர் மிஷ்கின் பேசுகையில், “சிவகார்த்திகேயன் அனைவரிடமும் நல்ல பெயர் எடுக்கக்கூடிய ஆள். சிவாவைப் பற்றி என்னிடம் சொல்லும் போது, இது சும்மா கதையாக இருக்கும் என நினைத்தேன். அப்படி இல்லை. மிக உண்மை. சிவகார்த்திகேயன் நேர்மையான மற்றும் உண்மையான ஒரு மனிதர். அனைவரிடமும் அன்பாக நடந்து கொள்வார்.

ஒரு இரவு முழுவதும் நடந்த சண்டைக் காட்சி முடிந்த பின் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டார். தன் சக உழைப்பாளியிடம் சென்று அவர்களிடம் மன்னிப்பு கேட்டார். அந்த ஒரு விஷயத்திற்காகவே 40 முதல் 50 ஆண்டுகள் அவர் சினிமாவில் இருக்க நான் சாபம் விடுகிறேன். சிவகார்த்திகேயனனின் நட்பு மிக இனிமையானது. நல்ல பையன்.

sivakarthikeyan
sivakarthikeyan

சினிமாவில் டைரக்ஷன் என்பது மிக கடினமான வேலை. ஒரு இயக்குநரை புரிந்து கொள்ளவே முடியாது. ஆனால் அனைத்து நொடிகளிலும் மடோன் அதை எப்படி சிறப்பாக செய்யலாம் என பார்த்துக் கொண்டிருந்தார்.

இந்த படத்தில் முழுக்க முழுக்க வில்லனாக நடித்துள்ளேன். நிறைய பேர் என்னை நிஜவாழ்க்கையிலேயே வில்லனாகத்தான் பார்க்கிறார்கள். இந்த படத்தில் நிஜமாக வாழ்ந்துள்ளேன்” என்றார். நிகழ்வில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசியவற்றை, கீழ் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com