தலைவர் 173 இயக்குநர் முடிவானாரா? | Rajinikanth | Thalaivar 173
`ஜெயிலர் 2' படத்தை முடித்தபின்னர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ராஜ்கமல் தயாரிப்பில் உருவாகும் `தலைவர் 173' படத்தில் ரஜினிகாந்த் நடிப்பார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்தப் படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்கப் போவதில்லை, `ஓ மை கடவுளே', `டிராகன்' படங்களை இயக்கிய அஷ்வத் மாரிமுத்து தான் இயக்கப் போகிறார் என்ற தகவல்கள் பரவியது.
இப்போது `ஜெயிலர் 2' படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது. ஆனாலும் ரஜினியின் அடுத்த படம் இயக்குவது யார் என்ற குழப்பங்கள் தொடர்ந்து வந்தது. இப்போது அந்தப் படத்தை அஷ்வத் தான் உறுதியாக இயக்குகிறார் எனச் சொல்லப்படுகிறது. படப்பிடிப்பையே இந்த மாதம் துவங்கும் அளவுக்கு இயங்கி வருகிறாராம் அஷ்வத்.
விரைவிலேயே இப்படத்தின் அறிவிப்பு வெளியாகும் என தகவல். இப்படம் முதலில் அறிவிக்கப்பட்டபோது 2027 பொங்கல் வெளியீடாக வரும் என அறிவிக்கப்பட்டது. இதனை ஒரு குறுகிய கால தயாரிப்பாகதான் திட்டமிட்டனர். இப்போது அஷ்வத் இயக்கத்தில் இந்தப் படம் பொங்கலுக்கு வரும்படி தயாராகுமா என்பது குறித்து தெரியவில்லை. இதுபற்றிய அறிவிப்பு வரும்போது கூடுதல் விவரங்கள் வரும் என எதிர்பார்க்கலாம்.

