சிறந்த நடிகர் மம்மூட்டியா? தனுஷா? என போட்டி - கலா மாஸ்டர் விளக்கம் | Dhanush | Mammootty
72வது தேசிய திரைப்பட விருதுகளில் நடுவராக இருந்த கலா, 400க்கும் மேற்பட்ட படங்களில் இருந்து தேர்வு செய்வது கடினமான பணியாக இருந்ததாக கூறுகிறார். தமிழ்ப்படங்களுக்கு இந்த முறை அதிக விருதுகள் கிடைத்தது மகிழ்ச்சி எனவும், மலையாளத்தில் மம்மூட்டியின் சிறந்த நடிப்புக்காக அவருக்கு விருது வழங்கப்பட்டதையும் பாராட்டுகிறார். இது தனது இரண்டாவது நடுவர் அனுபவம் எனவும் கூறுகிறார்.
2024ம் ஆண்டு மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியத்தால் சான்றளிக்கப்பட்ட திரைப்படங்களுக்கு 72வது தேசிய திரைப்பட விருதுகளின் அறிவிப்பு நேற்று வெளியாகின. இந்த விருதுகளில் நடுவராக இருந்த கலா பேட்டி அளித்திருக்கிறார்.
அதில் "72வது தேசிய விருதுகளில் நடுவராக பணியாற்றியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் நடுவராக இருப்பது இது இரண்டாவது முறை. இந்த முறை தமிழ்ப்படங்களை நிறைய விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. 400 படங்கள் பார்த்து அதிலிருந்து தேர்வு செய்வது பெரிய பணியாக இருந்தது. தமிழில் நிறைய படங்கள் விருது பெற்றிருக்கிறது. மலையாளத்தில் மம்மூட்டி சாருக்கு கிடைத்திருப்பதும் மகிழ்ச்சி. அந்தப் படத்தில் அவரது நடிப்பு மிகவும் சிறப்பாக இருந்தது.
சிறந்த நடிகராக மம்மூட்டியா தனுஷா என பெரிய போட்டியே இருந்தது. இருவருக்கும் சம அளவில் ஒட்டு விழுவது போல இருந்தது. பின்னர் மம்மூட்டிக்கு அதிக ஒட்டு விழுந்தது. ஆனாலும் கேப்டன் மில்லர் படத்தில் தனுஷ் நடிப்பு அற்புதமாக இருந்தது. அவரது சிறந்த நடிப்பை பார்த்து இதற்கு விருது கொடுத்தே ஆக வேண்டும் என்று தான் சிறப்பு விருதை அளித்தோம்." என்றார்.

