\
Vikram
VikramChiyaan 63

இருமுகன் இயக்குநரோடு கைக்கோர்த்த விக்ரம்.. ஃபேமிலி ஆக்சன் திரில்லராக உருவாகும் `சியான் 63'!

இதற்காக விரிவான முன்தயாரிப்பு பணிகள் ஏற்கனவே நிறைவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் திட்டமிட்ட காலக்கெடுவுக்குள் படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியில் படக்குழு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
Published on
Summary

விக்ரம் பிறந்தநாளை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட ‘சியான் 63’ படத்தை ஆனந்த் ஷங்கர் இயக்குகிறார். ‘இருமுகன்’க்கு பிறகு இருவரும் மீண்டும் இணையும் இந்த படம், குடும்பம் முழுவதும் ரசிக்கும் ஃபேமிலி ஆக்சன் திரில்லராக உருவாகிறது. விக்ரமின் மாஸ் அம்சங்களுடன் உணர்ச்சி, பரபரப்பு, அதிரடி காட்சிகள் கலந்த முழுமையான விருந்தாக ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விக்ரம். விக்ரம் நடித்து கடைசியாக வெளியான `வீர தீர சூரன்' படம் வந்து ஓராண்டு ஆகிவிட்டது. விக்ரமின் அடுத்த படம் எதுவும் துவங்காமல் இருந்த நிலையில் சியான் 63 பட அறிவிப்பு விக்ரம் பிறந்தநாளை முன்னிட்டு வந்தது. ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் இப்படம் உருவாகிறது. ’இருமுகன்’ படத்திற்கு அடுத்து இரண்டாவது முறையாக இப்படத்தில் இணைந்துள்ளது விக்ரம் - ஆனந்த் ஷங்கர் கூட்டணி.

Vikram
Vikramஎக்ஸ் தளம்

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் தொடங்கியுள்ள நிலையில், இதற்காக விரிவான முன்தயாரிப்பு பணிகள் ஏற்கனவே நிறைவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் திட்டமிட்ட காலக்கெடுவுக்குள் படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியில் படக்குழு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. `சீயான் 63' அனைவரும் ரசிக்கும் வகையிலான ஃபேமிலி ஆக்சன் திரில்லர் திரைப்படமாக உருவாகவுள்ளது. விக்ரமின் வழக்கமான மாஸ் அம்சங்களுடன், குடும்ப பார்வையாளர்களையும் கவரும் வகையிலான உணர்வுப்பூர்வமான கதை, பரபரப்பான திரில்லர் திரைக்கதை மற்றும் அதிரடியான ஆக்சன் காட்சிகள் இணைந்த முழுமையான விருந்தாக இந்த படம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Chiyaan 63
Chiyaan 63
Vikram
சசி சாருக்காக பிரின்சிபாலை மிரட்டினேன்! - பா இரஞ்சித் சொன்ன சம்பவம் | Pa Ranjith | Sasi

இப்படத்தில் எம். எஸ். பாஸ்கர், ஊர்வசி, சம்யுக்தா ஹெக்டே, ரியா ஷிபு, வி.டி.வி. கணேஷ், சுபாஷ் செல்வம் மற்றும் விஷ்ணு ஜி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் இணைந்திருப்பதும் படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது. மேலும் ஒளிப்பதிவாளராக ஆர்.டி. ராஜசேகர் ISC, தயாரிப்பு வடிவமைப்பாளராக ராஜீவன், வசன எழுத்தாளராக ஷான் கருப்புசாமி, சண்டைக் காட்சிகள் இயக்குநராக ஸ்டண்ட் சில்வா, படத்தொகுப்பாளராக ரேமண்ட் டெரிக் கிராஸ்டா என வலுவான கூட்டணி இணைந்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com