“தலைவணங்கி மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” - தீனா பட ரீ-ரிலீஸ் நேரத்தில் கில்லி பேனரை கிழித்த ரசிகர்!

தீனா பட கொண்டாட்டத்தின் போது கில்லி திரைப்பட பேனரை கிழித்த அஜித் ரசிகர்களின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து அவர் மன்னிப்பு கோரி வீடியோ வெளியிட்டுள்ளார்.
கில்லி பேனரை கிழித்த அஜித் ரசிகர்
கில்லி பேனரை கிழித்த அஜித் ரசிகர்முகநூல்

தமிழ் சினிமாவில் ரீ ரிலீஸ் படங்கள் அதிகரித்து வரும் வேளையில், விஜய்யின் கில்லி திரைப்படம் 20 வருடங்களுக்கு பிறகு வெளியாகி வசூலை வாரிக்குவித்து வருகிறது. உலகம் முழுவதும் சுமார் 600 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது கில்லி.

கில்லி பேனர் கிழிப்பு
கில்லி பேனர் கிழிப்புமுகநூல்

இந்நிலையில் அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு தீனா திரைப்படம் நேற்று ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. அப்போது சென்னையில் உள்ள பிரபல திரையரங்கில் அஜித் ரசிகர் ஒருவர், விஜய்யின் கில்லி பட போஸ்டரை கிழித்தார். அந்த வீடியோ இணையத்தில் வைரலானது.

கில்லி பேனரை கிழித்த அஜித் ரசிகர்
சல்மான் கான் வீட்டருகே நடந்த துப்பாக்கிச்சூடு - வழக்கில் கைதானவர் விபரீத முடிவு

இதையடுத்து பேனரை கிழித்த லோகேஷ் (எ) எபினேஷ் (27) என்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவர், மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்ட பிறகு காவல் நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

தன் மன்னிப்பு வீடியோவில், நண்பர்களோடு இணைந்து ஆர்வத்தில் இப்படி செய்துவிட்டதாகவும், தலைவணங்கி மன்னிப்பு கோர்வதாகவும் லோகேஷ் தெரிவித்திருந்தார். அந்த வீடியோவும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com