\
Bigg Boss Tamil
Bigg Boss TamilBigg Boss Tamil

பிக் பாஸ் தமிழ் சீசன் 10 : களமிறங்கும் போட்டியாளர்கள் யார்?

தமிழ் சின்னத்திரையின் பிரபல ரியாலிட்டி ஷோ ‘பிக் பாஸ் தமிழ்’ 10வது சீசன் செப்டம்பர் 6, 2026 முதல் தொடங்கவுள்ள நிலையில், இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான 21 போட்டியாளர்கள் கொண்ட உத்தேச பட்டியல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Published on

தமிழ் சின்னத்திரையின் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் தமிழ், தற்போது தனது 10-வது சீசனை நோக்கி நகர்கிறது. இந்த சீசனும் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க, செப்டம்பர் 6, 2026 அன்று தொடங்க உள்ளது. பத்தாவது சீசன் என்பதால் இந்த முறை நிகழ்ச்சியை இன்னும் பிரம்மாண்டமாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நிகழ்ச்சி தரப்பு தெரிவித்துள்ளது.

இந்த சீசனின் மிகப்பெரிய புதுமையாக ‘பிக் பாஸ் – தி காமன் மேன்’ என்ற நிகழ்ச்சி மூலம் பொது மக்களில் இருந்தும் போட்டியாளரைத் தேர்வு செய்யும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுமார் 40 பேர் பங்கேற்ற இந்தத் தேர்வு நிகழ்ச்சியில், ஓவியா, ஆரி அர்ஜுனன் மற்றும் ராஜு ஜெயமோகன் நடுவர்களாக இருந்தனர்.

Bigg boss common man
Bigg boss common manJio Hotstar

வைரலாகும் 21 பேர் பட்டியல்

பிக் பாஸ் 10 போட்டியாளர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நிகழ்ச்சி தொடங்கும் நாளில்தான் வெளியாகும் என முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், தற்போது சமூக வலைதளங்களில் ஒரு 21 பேர் கொண்ட உத்தேச பட்டியல் பரவி வருகிறது. இந்தப் பட்டியல் அதிகாரப்பூர்வமானது அல்ல என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தற்போது வெளியாகியுள்ள பட்டியலில் இடம்பெற்றுள்ள பெயர்கள்:

1. ஜாய் கிரிசில்டா – ஸ்டைலிஸ்ட்

2. பிரியா ராமன் – நடிகை

3. ஜனனி அசோக் – விஜய் டிவி

4. டோலி – டான்சர்/கலைஞர்

5. முரளி விஜய் – முன்னாள் கிரிக்கெட் வீரர்

6. ஆர்யன் – சின்னத்திரை நடிகர்

7. புவியரசு – சின்னத்திரை நடிகர்

8. ItIs பிரசாந்த் – யூடியூபர்

9. நவீன் – விஜய் டிவி

10. வினோத் பாபு – சீரியல் நடிகர்

11. குரேஷி – நகைச்சுவை நடிகர்

12. சிந்தியா வினோலின் – நடனக் கலைஞர்

13. அக்ஷிதா அசோக் – விஜய் டிவி

14. ஃபரினா – சின்னத்திரை நடிகை

15. ஹேமா ராஜ்குமார் – சின்னத்திரை நடிகை

16. பானுமதி – விஜய் டிவி

17. கரிஷ்மா – பொதுமக்கள் பிரிவு

18. முனியம்மா – பொதுமக்கள் பிரிவு

19. ஜேசன் கௌஷி – பொதுமக்கள் பிரிவு

20. ஸ்வப்னா – மேக்கப் ஆர்டிஸ்ட்

21. கயு ஸ்ரீ – விஜய் டிவி

Bigg Boss Tamil
பொங்கல் ரிலீஸாகும் ’தர்மன்’ - ’புருஷன்’.. ரஜினியுடன் மோதும் விஷால்!

சினிமா முதல் சின்னத்திரை வரை...

இந்த பட்டியல் உண்மையாக அமைந்தால், பிக் பாஸ் தமிழ் சீசன் 10-ல் சினிமா, சின்னத்திரை, டிஜிட்டல் மீடியா, நடனம் மற்றும் பொதுமக்கள் என பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் ஒன்றாக களமிறங்கும் வாய்ப்பு உள்ளது.

குறிப்பாக பிரியா ராமன் மற்றும் முரளி விஜய் போன்ற பெயர்கள் இடம்பெற்றிருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதேபோல் ஃபரினா, ஹேமா ராஜ்குமார், ஜனனி அசோக், அக்ஷிதா அசோக் உள்ளிட்ட சின்னத்திரை பிரபலங்களின் பெயர்களும் பேசுபொருளாகியுள்ளன.

இதற்கிடையில், ‘தி காமன் மேன்’ முயற்சி காரணமாக இந்த சீசனில் வழக்கமான பிரபல போட்டியாளர்களுடன் பொதுமக்களும் இணையும் புதிய கலவை உருவாக உள்ளது.

Bigg Boss Tamil
Bigg Boss TamilBigg Boss Tamil

அதிகாரப்பூர்வ பட்டியல் எப்போது?

தற்போது வெளியாகியிருக்கும் பெயர்கள் அனைத்தும் உத்தேச பட்டியல் மட்டுமே. நிகழ்ச்சி தயாரிப்பாளர்களால் முழுமையான அதிகாரப்பூர்வ போட்டியாளர் பட்டியல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. எனவே, சமூக வலைதளங்களில் வெளியாகும் ஒவ்வொரு பெயரையும் உறுதி செய்யப்பட்ட போட்டியாளர் என எடுத்துக்கொள்ள முடியாது.

பத்தாவது சீசன் என்பதாலும், விஜய் சேதுபதி மீண்டும் தொகுப்பாளராக களமிறங்குவதாலும், புதிய விதிமுறைகள் மற்றும் ‘காமன் மேன்’ முயற்சியாலும் பிக் பாஸ் தமிழ் 10 மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. செப்டம்பர் 6-ம் தேதி நிகழ்ச்சி தொடங்கும்போது, இந்த 21 பேரில் யார் உண்மையில் பிக் பாஸ் வீட்டுக்குள் செல்கிறார்கள் என்பது தெளிவாகும்

Bigg Boss Tamil
இரண்டு மாதங்களில் 14 கிலோ.. படத்துக்காக உடல் எடையை அதிகரித்த நிமிஷா சஜயன்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com