\
Bala share his relationship with director Vijay
Bala Kadhal Reset Repeat

"விஜய் எனக்கு தாயுமானவன்!" - நெகிழ்ந்த பாலா | Bala | Vijay

நான் விஜய்க்கு குரு எனச் சொல்லிவிட்டீர்கள், அது தவறு. எனக்குத்தான் எல்லாவிதத்திலும் விஜய் குரு. என்னைவிட ஜூனியராக வேண்டுமானால் இருக்கலாம், ஆனால் எப்படி கடுமையாக உழைக்க வேண்டும் என்பதை எனக்கு கற்றுத்தந்த குரு அவர்தான்.
Published on

விஜய் இயக்கத்தில் மதும்கேஷ், அர்ஜுன் அசோகன், ஜியா, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் `காதல் ரீ செட் ரிப்பீட்'. இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு சமீபத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் பாலா கலந்து கொண்டார்.

நிகழ்வில் பாலா பேசியபோது, "நான் விஜய்க்கு குரு எனச் சொல்லிவிட்டீர்கள். அது தவறு. எனக்குத்தான் எல்லாவிதத்திலும் விஜய் குரு. என்னைவிட ஜூனியராக வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் எப்படி கடுமையாக உழைக்க வேண்டும் என்பதை எனக்கு கற்றுத் தந்த குரு அவர்தான். ஒரே வார்த்தையில் சொல்வதென்றால், அவர் எனக்கு தாயுமானவன். என்னுடைய நல்லது கெட்டது எல்லாவற்றிலும் முதல் ஆளாக பங்கெடுத்துக் கொள்வான். அவன் எப்போதும் நன்றாக இருக்க வேண்டும் என நானும், நான் நன்றாக இருக்க வேண்டும் என அவனும் நினைக்கிறோம் என்பது நூறு சதவீதம் உண்மை.

இந்தப் பட ட்ரெய்லரில், ’நிம்மதியா தூங்கினா எல்லாம் சரியாகிடும்’ என வசனம் வருகிறது. தூங்கினால் சரியாகும்தான், ஆனால் தூங்கமலே ஒரு மனிதர் வேலை பார்க்கிறார் என்றால் அது ஏ.எல்.விஜய்தான். நடிகை விஜியை நான் இப்போதுதான் நேரில் பார்க்கிறேன். நான் உங்களுடைய ரசிகன். ’மதயானைக்கூட்டம்’ படத்தில் உங்களுடைய நடிப்பு மிகச் சிறப்பாக இருக்கும். அதில் க்ளைமாக்ஸ் காட்சியில் உங்கள் கண் மூலமாகவே சிறப்பாக நடித்திருப்பீர்கள். எனக்குப் பிடித்த நடிகை ராதிகா மேடம்தான், அதற்கடுத்து பிடித்த நடிகை என்றால் நீங்கள்தான் (விஜி)." என்றார்.

Bala share his relationship with director Vijay
சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ வெளியானது ஃபர்ஸ்ட் லுக்! | Suriya | Vishwanath & Sons
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com