At first Mamitha was not part of Kara says Vignesh Raja
Mamitha Baiju, Vignesh RajaKara

"முதலில் `கர' படத்தில் மமிதாவே இல்லை..." - விக்னேஷ் ராஜா சொன்ன ரகசியம் | Mamitha Baiju | Kara

அந்த சமயத்தில் தான் பிரேமலு படம் வெளியாகி பெரிய பேசு பொருளாகிறது. உடனே என்னுடைய உதவி இயக்குநர்களில் சிலர் மமிதாவின் பெயரை சொல்கிறார்கள். அவர் நடித்த படங்களின் சில காட்சிகளை பற்றி கேட்டு அதனை பார்த்தேன்.
Published on

தனுஷ், மமிதா பைஜூ, ஜெயராம், கருணாஸ் எனப் பலரும் நடித்து விக்னேஷ் ராஜா இயக்கியுள்ள படம் `கர'. ஏப்ரல் 30ம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில், பல பேட்டிகளை அளித்து வருகிறார் விக்னேஷ் ராஜா. அப்படி சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்தப் படத்திற்கு மமிதா பைஜூவை தேர்வு செய்தது எப்படி என கூறியுள்ளார். அதில் "எப்போதுமே நான் ஸ்க்ரிப்ட் முடித்தவுடன் என்னுடைய உதவி இயக்குநர்களிடம் பல விஷயங்களுக்கு சஜஷன் கேட்பேன்.  அதில் ஒன்று படத்தின் நடிகர் தேர்வு. படத்தின் ஒவ்வொரு பாத்திரத்திற்கும் அவர்கள் ஐந்து நடிகர்களின் பரிந்துரையை தர வேண்டும். அந்த பட்டியலை வைத்துக் கொண்டு யாருடைய தேதிகள் கிடைக்கிறது என்பது குறித்து விசாரிப்போம். மேலும், படத்தின் ஆடிஷன்களையும் நடத்துவோம். ஆனால், முதலில் என் உதவி இயக்குநர்கள் கொடுத்த பட்டியலில் மமிதாவின் பேரே இல்லை.

Premalu
Premalu

அந்த சமயத்தில் தான் பிரேமலு படம் வெளியாகி பெரிய பேசு பொருளாகிறது. உடனே என்னுடைய உதவி இயக்குநர்களில் சிலர் மமிதாவின் பெயரை சொல்கிறார்கள். அவர் நடித்த படங்களின் சில காட்சிகளை பற்றி கேட்டு அதனை பார்த்தேன். அவர் நடிப்பே சிறப்பாக இருந்தாலும், ரொம்பவும் சின்ன பெண்ணாக இருக்கிறாரே என்ற தயக்கம் இருந்தது. அப்போது ஜனநாயகன் பட தயாரிப்பு தரப்பு KVN நிறுவனத்தில் என்னுடைய நண்பர் ஒருவர் மமிதாவின் நடிப்பு பற்றி கூறினார். பிரதீப்பும் ட்யூட் படத்தில் அவருடன் பணியாற்றியது பற்றி கூறினார். இவ்வளவு பேர் சொல்கிறார்கள் என்றால் ஏதாவது இருக்கும் தானே என நினைத்தேன்.

At first Mamitha was not part of Kara says Vignesh Raja
`3 Idiots' இரண்டாம் பாகம் உருவாகிறது..! - அமீர்கான் தந்த செம்ம அப்டேட்!

லுக் டெஸ்ட் செய்தபோதே அவர் பொருத்தமாக இருக்கிறார் என தோன்றியது. பின்னர் ஒரு காட்சியை கூறி நடித்து காட்ட சொன்னேன். இறுதியாக பார்க்கையில் சைத்ரா மற்றும் மமிதா இருவரின் நடிப்பு தான் நன்றாக இருந்தது. ஆனால் அப்போது சைத்ரா `மை லார்ட்' படம் நடிக்கிறேன் என சொன்னார். அதில் அப்படியே `கர' படத்தின் லுக்கில் தான் இருந்தார்.

Kara
Kara

அப்படம் முன்னரே வந்துவிடும் என்பதால் நம் படத்தில் அவரை பார்க்கையில் புதிதாக இருக்காதே என நினைத்தேன். பின்னர் தான் மமிதாவுக்கு கதை சொன்னேன். அவர் வழக்கமாக நடிக்கும் படியான கதை இல்லை என்பதால் நோ சொல்வார் என நினைத்தேன். ஆனால் அவருக்குள் வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என இருந்தது போல சரி என சொல்லிவிட்டார். மிக சிறப்பாக நடித்திருக்கிறார்" எனக் கூறியுள்ளார் விக்னேஷ் ராஜா.

At first Mamitha was not part of Kara says Vignesh Raja
’2062-ல் தான்..’ த்ரிஷா பதிவிட்ட இன்ஸ்டா ஸ்டோரி!
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com