Bobby Deol, Anurag Kashyap
Bobby Deol, Anurag KashyapBandar

அனுராக் காஷ்யப்பின் `Bandar' பட டீசர் வெளியீடு! | Anurag Kashyap | Bobby Deol

அனுராக் காஷ்யப் இயக்கத்தில் இரு பாகங்களாக வெளியான Nishaanchi மற்றும் இந்த ஆண்டு வெளியான Kennedy போன்ற படங்கள் எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை.
Published on

இந்திய சினிமாவில் கவனிக்கத்தகுந்த இயக்குநர்களில் ஒருவர் அனுராக் காஷ்யப். இவரின் Dev.D, Gangs of Wasseypur இரு பாகங்கள், Raman Raghav 2.0, Manmarziyaan எனப் பல படங்கள் பெரிய வரவேற்பை பெற்றன.  கடந்த ஆண்டு இவர் இயக்கத்தில் இரு பாகங்களாக வெளியான Nishaanchi மற்றும் இந்த ஆண்டு வெளியான Kennedy போன்ற படங்கள் எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை.

தற்போது இவர் இயக்கியுள்ள `Bandar' ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இப்படத்தில் பாபி தியோல், சபா ஆசாத், சன்யா மல்ஹோத்ரா, சப்னா, இந்திரஜித் சுகுமாரன், ராஜ் பி ஷெட்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். புகழை இழந்து கொண்டிருக்கும் ஒரு டிவி நடிகர், அவரின் முன்னாள் காதலியால் ஒரு பிரச்சனையில் சிக்கிக் கொள்வதும், பின்னர் அதிலிருந்து தப்பிக்க எடுக்கும் சட்ட போராட்டங்களுமே கதை.

இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. தொடர் தோல்வியில் இருக்கும் அனுராக் காஷ்யப் இந்தப் படத்தின் மூலம் பழையபடி தன் புகழை பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. படம் ஜூன் 5ம் தேதி வெளியாகவுள்ளது. 

 Bobby Deol, Anurag Kashyap
"100வது படத்தில் நீங்கள் நடிக்க வேண்டும் என்றார் ஆர்.பி. சௌத்ரி!" - ரஜினி பகிர்வு | Rajinikanth
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com