Anirudh started his music label
Anirudh Albuquerque

அனிருத்தின் மியூசிக் லேபிளில் Breaking Bad Reference! | Albuquerque | Anirudh

இப்போது அனிருத் தனது மியூசிக் லேபிளை உருவாக்கியுள்ளார். இதற்கு ALBUQUERQUE RECORDS எனப் பெயரிட்டுள்ளார்.
Published on

தமிழ் சினிமாவைத் தாண்டி இந்திய சினிமாவின் முக்கிய இசையமைப்பாளராக மாறியுள்ளார் அனிருத். தமிழில் விஜயின் `ஜனநாயகன்', ரஜினியின் `ஜெயிலர் 2', `தலைவர் 173', சிம்புவின் `அரசன்', தெலுங்கில் அல்லு அர்ஜூன் - லோகேஷ் கனகராஜ் படம், இந்தியில் ஷாரூக்கானின் `கிங்' எனப் பல படங்களில் பணியாற்றி வருகிறார். இப்போது இவர் தனது மியூசிக் லேபிளை உருவாக்கியுள்ளார். இதற்கு ’ALBUQUERQUE RECORDS’ எனப் பெயரிட்டுள்ளார். Albuquerque என்பது மெக்சிகோவின் ஒரு நகரம். முக்கியமாக அனிருத் ஒரு வெறித்தமான `ப்ரேக்கிங் பேட்' ரசிகர் என்பதால், அந்தக் கதை நிகழும் ’Albuquerque’ என்ற ஊரின் பெயரை தனது மியூசிக் லேபிளுக்கு வைத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "உங்களுடன் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஆக்கப்பூர்வ மற்றும் உத்தியாகவும் எனது முக்கியமான அடியாகவும் இதைச் சொல்வேன். இந்த லேபிள் எனது திரைப்படம் மற்றும் திரைப்படம் அல்லாத படைப்புகளுக்கான இடமாக இருக்கும். அதேநேரத்தில் புதிய, திறமையான மற்றும் தகுதிவாய்ந்த கலைஞர்களை ஆதரிக்க உள்ளது. அசல் குரல்களை, பிராந்திய திரைப்படம் அல்லாத இசை கலாசாரத்தை முன்னெடுத்து செல்லும் ஒரு பிராண்டை ஊக்குவிக்க விரும்புகிறோம். முதலில், என்னுடைய தேர்ந்தெடுக்கப்பட்ட OST மற்றும் எனது அனைத்து திரைப்படம் அல்லாத (POP) இசை, இந்த லேபிளின்கீழ் வெளியிடப்படும். இதன்மூலம் உருவாக்கப்பட்டு வரும் அற்புதமான இசையை உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஆவலாக இருக்கிறேன். எங்கள் லேபிளில் நீங்கள் ஒரு பகுதியாக இருக்க விரும்பினால், உங்கள் முழுமையாக முடிக்கப்பட்ட டெமோக்களை demos@alburecords.in என்ற முகவரிக்கு அனுப்பவும்" என்றார்.

Anirudh started his music label
சினிமாவில் அறிமுகமாகும் தமிழ்நாடு அரசியல்வாதி மகள்! | Emaya | Heartin

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com