\
Ajith
AjithGladiators

அஜித்தின் ரேஸ் படம் ரிலீஸ் எப்போது? | Ajithkumar | Gladiators

அவரது அடுத்த படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் என்பது ஏற்கெனவே உறுதியாகிவிட்டது. ஆனாலும் அதன் படப்பிடிப்பை துவங்காமல் இருக்கின்றனர்.
Published on
Summary

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரம் அஜித், சினிமாவிலிருந்து இடைவேளை எடுத்து கார் ரேஸில் கவனம் செலுத்தி வருகிறார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு, அவர் தற்போது பங்கேற்கும் ரேஸ் முடிந்த பின் தொடங்கும் என கூறப்படுகிறது. இதற்கிடையில், தனது ரேஸ் பயணத்தை அடிப்படையாகக் கொண்ட திரைப்படத்தை ‘GLADIATORS’ என்ற பெயரில் உருவாக்கி வருகிறார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித். தற்போது சினிமாவிலிருந்து ப்ரேக் எடுத்து கார் ரேஸில் கவனம் செலுத்தி வருகிறார். அவரது அடுத்த படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் என்பது ஏற்கெனவே உறுதியாகிவிட்டது. ஆனாலும் அதன் படப்பிடிப்பை துவங்காமல் இருக்கின்றனர். இப்போது அஜித் கலந்து கொண்டுள்ள ரேஸ் முடித்துவிட்டு அப்படம் துவங்கும் என சொல்லப்படுகிறது.

Ajith
Ajith

இதற்கு இடையில் அஜித் தன்னுடைய ரேஸ் பயணத்தை ஒரு படமாக தயார் செய்து வருகிறார். இதனை விஜய் இயக்க, ஜி வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். அஜித்தின் பிறந்தநாளான மே 1ம் தேதி இப்படத்திற்கு GLADIATORS எனப் பெயரிடப்பட்டுள்ளதையும், படத்தின் மோஷன் போஸ்டரையும் வெளியிட்டனர். இதனை ஒரு ஆவணப்படம் போல் அல்லாமல் ஒரு திரைப்படம் போலவே உருவாக்கி வருகிறார் அஜித்.

Ajith
பாடல்கள் + பின்னணி இசை படத்துக்கு முன்பே ரிலீஸ்! - இளையராஜா இசை பற்றி கார்த்திக் சுப்புராஜ்!

இப்போது இதன் வெளியீடு குறித்த தகவல்கள் பரவி வருகிறது. முன்பு இப்படம் மே மாதம் வெளியாவதாக சொல்லப்பட்டது. ஆனால் இப்போது இந்தப் படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என சொல்லப்படுகிறது. 1 மணிநேரம் 40 நிமிடங்கள் என படம் ஏறக்குறைய தயார் நிலையில் உள்ளதாம். இதுகுறித்த அப்டேட் விரைவில் வரும் என சொல்லப்படுகிறது.

Ajith
சூர்யாவின் முதல் 200 கோடி கலெக்ஷன்... கருப்பு சாதனை! | Karuppu | Suriya
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com