Ajithkumar
AjithkumarThirupathi

"தல தல" என கோஷமிட்ட ரசிகர்களை ஒரே வார்த்தையில் அமைதியாக்கிய அஜித்... வைரலாகும் வீடியோ! | Ajith

அஜித் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்தபோது, ரசிகர்கள் 'தல தல' என கூச்சலிட்டனர். அஜித் அமைதியாக சைகை காட்டி அவர்களை அமைதியாக்கினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், அஜித்தின் பண்பை ரசிகர்கள் பாராட்டுகின்றனர்.
Published on
Summary

அஜித் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்தபோது, ரசிகர்கள் 'தல தல' என கூச்சலிட்டனர். அஜித் அமைதியாக சைகை காட்டி அவர்களை அமைதியாக்கினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், அஜித்தின் பண்பை ரசிகர்கள் பாராட்டுகின்றனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித். குட் பேட் அக்லி படத்திற்கு பிறகு ரேஸில் கவனம் செலுத்தி வந்தார். தற்போது இந்தியா திரும்பியிருக்கும் அஜித் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அப்போது, அஜித்தை பார்த்து ரசிகர்கள் கூச்சலிட்டு கத்தினார்கள். அந்த நேரத்தில் அஜித் செய்த செயல் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது

கடந்த ஒரு சில நாட்களாக அஜித்தின் சில புகைப்படங்களும், வீடியோவும் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. அதனைத் தொடர்ந்து இன்றும் ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. கடந்த வாரம் கேரளாவில் இருக்கும் பாலக்காடு பகவதி அம்மன் கோவிலில் குடும்பத்தினருடன் சென்று சாமி தரிசனம் செய்தார். அங்கு அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியானது. அதைத் தொடர்ந்து, திருப்பூரில் கொங்குநாடு ரைபிள் கிளப்பின் நிறுவனர் செந்தில் குமாருடன் இணைந்து, துப்பாக்கிச்சுடும் பயிற்சியில் ஈடுபட்டார். இந்த வீடியோவை அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா வெளியிட்டு இருந்தார்.

Ajithkumar
2 மாநில வாக்காளர் பட்டியலில் பிரசாந்த் கிஷோர் பெயர்... புதிய சர்ச்சை!

அஜித்குமார் தற்போது திருப்பதியில் சாமி தரிசனம் செய்துள்ளார். பட்டு வேஷ்டி சட்டையில் வந்த அஜித்தை பார்த்த ரசிகர்கள் உற்சாகமாகி "தல தல" என கோஷமிட்டனர்.  அஜித் இதனை கண்டிக்கும் வகையில் கோவிலுக்குள் இப்படி கத்தக் கூடாது என்பது போல சைகை காட்டினார். அதேபோல, தன்னுடன் புகைப்படம் எடுக்க ஆசைப்பட்ட சிலரோடு புகைப்படம் எடுத்துக் கொண்டார். அப்போது, செவித்திறன் குறைபாடு உடைய மாற்றுத்திறனாளி அஜித்துடன் போட்டோ எடுக்க வந்தார். அஜித் அவரின் செல்போனை வாங்கி அவருடன் செல்ஃபி எடுத்தார். இந்த வீடியோதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், எப்போதும் போல அஜித்தின் பண்பை குறிப்பிட்டு பாராட்டி வருகின்றனர்.

Ajithkumar
வி ஜே சித்து இயக்கும் `டயங்கரம்' பூஜையுடன் துவக்கம்! | V J Siddhu | Dayangaram

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com