உலக சினிமா அரங்கில் இந்தியாவிற்காக புன்னகைக்கும் திரை தேவதைகள்!

சர்வதேச அளவில் கவனிக்கப்படும் கான் திரைப்பட விருது விழாவில், இந்திய படைப்பான ALL WE IMAGINE AS LIGHT படத்துக்கு முக்கிய விருது கிடைத்திருக்கிறது.. விவரங்களை விரிவாகப் பார்க்கலாம்...
விருது பெற்றவர்கள்
விருது பெற்றவர்கள்pt web

சர்வதேச அங்கீகாரத்தை கையில் ஏந்தி, உலக சினிமா அரங்கில் இந்திய நாட்டின் சார்பாக புன்னகைத்துக் கொண்டிருக்கிறார்கள், இந்த திரை தேவதைகள்...

ஃபிரான்ஸில் நடந்த கான் திரைப்பட விருது விழாவில், 2ஆவது சிறப்புமிக்க விருதான GRAND PRIX விருதை வென்றிருக்கிறது, இயக்குநர் PAYAL KAPADIA-வின் ALL WE IMAGINE AS LIGHT திரைப்படம். கேரளாவைச் சேர்ந்த 3 செவிலியர்கள், மும்பையில் வசிக்கும் நிகழ்வை மையமாக வைத்து இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. 3 வெவ்வேறு வயது கொண்ட பெண்களின் உணர்வுகளையும், அவர்களின் உளவியலையும் திரையில் காட்சியாக உருவாக்கியுள்ளார், இயக்குநர் PAYAL KAPADIA. இந்தியா சார்பில் 7 படங்கள் பங்கேற்ற நிலையில், அதில் சிறப்பு விருதை தட்டிச் சென்றிருக்கிறது, ALL WE IMAGINE AS LIGHT திரைப்படம்.

சமீபத்தில் வரவேற்பைப் பற்ற LAAPATTAA LADIES படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த CHHAYA KADAM, மலையாள நடிகை கனி கஸ்ருதி, DIVYAPRABA உள்ளிட்டோர் விருதுவென்ற படத்தில் நடித்துள்ளனர். 30 வருடங்களுக்குப்பின் கான் விருது விழாவின் பிரதான விருது பிரிவுக்கு பரிந்துரைக்கப்பட்டு, விருதையும் பெற்றிருக்கும் படைப்பு என்ற சிறப்பை, ALL WE IMAGINE AS LIGHT திரைப்படம் பெற்றுள்ளது.

விருது பெற்றவர்கள்
குஜராத் தீ விபத்து: அடையாளம் தெரியாத அளவிற்கு எரிந்த உடல்கள்.. வெளியான திடுக்கிடும் தகவல்கள்!

1946ஆம் ஆண்டு CHETAN AANAD-இன் NEECH NAGAR, வங்காள இயக்குநர் MRINAL SEN-இன் KHARIJ ஆகிய படைப்புகள், கான் விழாவின் சிறப்பு விருதுகளை வென்றுள்ளன. GRAND PRIX விருது குறித்த அறிவிப்பு வெளியானது முதல், பிரதமர் நரேந்திர மோடி, ராகுல் காந்தி என பிரபலங்கள், PAYAL KAPADIAவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மும்பையைச் சேர்ந்த இயக்குநரான PAYAL KAPADIA, கான் விருது விழாவில் ஏற்கெனவே ஒரு விருதை வென்றுள்ளார். A NIGHT OF KNOWING NOTHING என்ற ஆவணப் படத்துக்காக அவருக்கு GOLDEN EYE என்ற சிறப்பு விருது கிடைத்துள்ளது.

இதோடு, சிறந்த நடிகைக்கான சிறப்பு விருதை தட்டிச் சென்றுள்ளார், கொல்கத்தாவைச் சேர்ந்த நடிகை, ANUSUYA SENGUPTA.. பல்கேரியாவைச் சேர்ந்த KONSTANTIN BOJANOV-வின் இயக்கத்தில் உருவான ஷேம்லஸ் படத்துக்கு பாராட்டுகள் கிடைத்துள்ளன. உலகத் திரை அரங்கில் இந்திய மகளிருக்கு கிடைத்திருக்கும் வெற்றி மகுடத்தை கொண்டாடிக் கொண்டிருக்கிறது, இந்திய சினிமா..

விருது பெற்றவர்கள்
நாயாக மாறிய ஜப்பானியர், மீண்டும் பூனை அல்லது நரியாக மாற திட்டம்? ஊடகங்களிடம் சொன்ன சுவாரஸ்ய தகவல்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com