மாமன் பட பூஜைஎக்ஸ் தளம்
கோலிவுட் செய்திகள்
சூரியுடன் இணையும் ஐஸ்வர்யா லட்சுமி.. பூஜையுடன் தொடங்கிய ‘மாமன்’ பயணம்!
நடிகர் சூரி நாயகனாக நடிக்கும் புதிய படத்திற்கு ’மாமன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம்வந்த நடிகர் சூரி தற்போது கதை நாயகனாக உருவெடுத்து வருகிறார். அந்த வகையில் அவர் ‘விடுதலை’, ‘கருடன்’, ‘கொட்டுக்காளி’ உள்ளிட்ட படங்களில் நடித்து வரவேற்பைப் பெற்று வருகிறார். இந்த வாரம் வெளியாக இருக்கும் ‘விடுதலை 2’விலும் அவர் நடித்துள்ளார். தொடர்ந்து, கதை நாயகனாக ஒருசில படங்களிலும் ஒப்பந்தமாகியுள்ளார்.
அந்த வகையில், ‘விலங்கு’ இணையத் தொடர் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரி நாயகனாக அடுத்த படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
லார்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு, ‘மாமன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. பூஜையுடன் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது.