”நான் உயிருடன் இருப்பதற்கு காரணமே நடிகர் கமல்ஹாசன்தான்”- வைரலாகும் ஆர்.எஸ்.சிவாஜியின் பழைய பேட்டி

பழம்பெரும் துணை நடிகரும், தயாரிப்பாளருமான எம்.ஆர்.சந்தானத்தின் மகனான, காமெடி நடிகர் RS சிவாஜி இன்று காலமானார்.
காமெடி நடிகர் RS சிவாஜி
காமெடி நடிகர் RS சிவாஜிPT Web

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் முதன்மை தயாரிப்பாளர் (Line Producer), சவுண்ட் இன்ஜினியர், உதவி இயக்குநர் உட்பட பல நிலைகளில் பணியாற்றியவர் ஆர்.எஸ்.சிவாஜி. பல படங்களில் நடித்திருந்தாலும், அபூர்வ சகோதரர்கள் படத்தில் வரும் , " நீங்க எங்கேயோ போயிட்டீங்க தெய்வமே" வசனம் மூலம் இன்றளவும் ட்ரெண்டிங்கில் இருக்கிறார்.

காமெடி நடிகர் RS சிவாஜி
RS Shivaji | பிரபல காமெடி நடிகர் RS சிவாஜி காலமானார்..!

மை டியர் மார்த்தாண்டன், சத்யா, மைக்கேல் மதன காமராஜன், குணா, அன்பே சிவம், உன்னைப் போல் ஒருவன், விக்ரம் என பல படங்களில் நடித்திருக்கிறார். விருமாண்டி படத்தில் வரும் ' உன்ன விட ' பாடலில் வரும் காளையின் கழுத்து மணி ஓசை இவர் பதிவு செய்து வைத்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆபூர்வ சகோதரர்கள் காமெடியைப் போலவே, பிரபுவுடன் 'வாங்க ஏழைகளா' காமெடிக் காட்சியாலும், அன்பே சிவம் படத்தில் வரும் ' two to two to two two' காமெடி காட்சியாலும் இன்றளவிலும் மீம்களில் வலம் வந்தவர் தான் காமெடி நடிகர் RS சிவாஜி. இந்நிலையில் இன்று காலை அவர் காலமானார்.

இந்நிலையில் ஆர்.எஸ்.சிவாஜி மரணத்திற்கு முன்னதாக ஒரு பேட்டியில் கூறும்போது “ என்னோட உடம்புல நாலு ப்ளாக் இருக்கு. கோவிட் டைம்ல என்னால மருந்து வாங்க முடியல, கமல் சார்கிட்டதான் உதவி கேட்டேன். அவர் மறுக்காம இன்னைக்கு வரைக்கும் உதவுகிறார். மாசம் ஆனால், ராஜ்கமல் ஆபீஸிலிருந்து மருந்து வந்து விடுகிறது. நான் விடும் மூச்சு, நான் உயிருடன் இருப்பதற்கு காரணமே கமல் சார்தான்” என்று பேட்டியளித்துள்ளார். இந்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com