Actor Jiiva penned a heartfelt note for fans
JiivaThalaivar Thambi Thalaimaiyil

"கண்டிஷன்ஸ் ஃபாலோ பண்ணி..." - வரவேற்பு பெறும் TTT, நெகிழ்ந்த ஜீவா! | Thalaivar Thambi Thalaimaiyil

நீங்கள் வாரி வழங்கியிருக்கும் அளவற்ற அன்பிலும், அரவணைப்பிலும் நான் உண்மையிலேயே நெகிழ்ந்து போயிருக்கிறேன். உங்கள் ஒவ்வொரு செய்தியும், ஒவ்வொரு ஊக்கமளிக்கும் வார்த்தையும் என் மனதை ஆழமாகத் தொட்டுள்ளது.
Published on

தமிழ் சினிமாவில் `ராம்', `ஈ', `கற்றது தமிழ்' என ஆரம்ப கட்டங்களிலேயே அழுத்தமான கதைகள் கொண்ட படங்களில் நடித்தவர் ஜீவா. அதனை தொடர்ந்து  `தெனாவட்டு', `சிவா மனசுல சக்தி', `கச்சேரி ஆரம்பம்', `கோ', `என்றென்றும் புன்னகை' எனப் பல ஹிட் படங்களை கொடுத்தார்.

சமீப காலங்களாக அவர் நடித்த சில படங்கள் பெரிய அளவில் வெற்றி ஆகாமலேயே இருந்தது. இந்தச் சூழலில் கடந்த 2024இல் ஜீவா நடிப்பில் வெளியான `ப்ளாக்' பெரிய ஹிட்டானது. இந்த ஆண்டு பொங்கல் வெளியீடாக வந்துள்ள `தலைவர் தம்பி தலைமையில்' படமும் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. மலையாளத்தில் பேசில் ஜோசப் நடித்து பெரிய வரவேற்பை பெற்ற FALIMY இயக்குநர் நிதிஷ் சஹாதேவ்தான் இந்தப் படத்தை இயக்கியிருந்தார். திரையரங்கிளில் இப்படத்துக்கு கிடைத்த வரவேற்பினால், காட்சிகள் அதிகப்படுத்தப்பட்டு, பெரிய திரைகளுக்கு படம் மாற்றப்பட்டு வருகிறது.

Actor Jiiva penned a heartfelt note for fans
"யாருக்கும் வலியை ஏற்படுத்த விரும்பியதில்லை" - சர்ச்சைக்கு ஏ ஆர் ரஹ்மான் விளக்கம் | A R Rahman

இந்த வரவேற்பைப் பற்றி நடிகர் ஜீவா தன் எக்ஸ் பக்கத்தில், "என் மக்களே, தலைவர் தம்பி தலைமையில் படத்திற்கு நீங்கள் வாரி வழங்கியிருக்கும் அளவற்ற அன்பிலும், அரவணைப்பிலும் நான் உண்மையிலேயே நெகிழ்ந்து போயிருக்கிறேன். உங்கள் ஒவ்வொரு செய்தியும், ஒவ்வொரு ஊக்கமளிக்கும் வார்த்தையும் என் மனதை ஆழமாகத் தொட்டுள்ளது. நிச்சயமாக, என்னைப் பற்றி வரும் அந்த மீம்ஸ்கள் (Memes) உட்பட. கூடவே 'எடிட்ஸ்' (Edits) அனைத்திற்கும் எனது கூடுதல் அன்பு.

அவை அனைத்தும் மிகுந்த அன்புடனும் ஆதரவுடனும் உருவாக்கப்பட்டுள்ளன. அவை இந்தப் பயணத்தை இன்னும் சிறப்பானதாக்குகின்றன. படம் பார்க்கும், பார்க்கப் போகும் அனைத்துக் கண்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். கண்டிஷன்ஸ் ஃபாலோ பண்ணி தியேட்டரில் மட்டுமே திரைப்படத்தைக் கண்டு மகிழுங்கள்!" எனக்குறிப்பிட்டுள்ளார்.

Actor Jiiva penned a heartfelt note for fans
பஞ்சாயத்து தலைவராக ஜீவா... கலாட்டா, காமெடி ஈர்க்கிறதா? | Thalaivar Thambi Thalaimaiyil Review

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com