'ஆயிரத்தில் ஒருவன் 2' வருவது என் கையில் இல்லை..' - செல்வராகவன் | Selvaragavan | Aayirathil Oruvan 2
செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும் 'மெண்டல் மனதில்' படத்தின் வேலைகள் முடிவடையும் நிலையில் உள்ளன. 'ஆயிரத்தில் ஒருவன் 2' பற்றிய முடிவுகள் அவரின் கையில் இல்லை எனவும், பலர் இணைந்து செயல்பட வேண்டும் எனவும் கூறியுள்ளார். '7G 2' மற்றும் 'மெண்டல் மனதில்' இந்த வருடம் வெளியாகும் என உறுதியாக தெரிவித்துள்ளார்.
செல்வராகவன் இயக்கத்தில் உருவாகிவரும் படம் `மெண்டல் மனதில்'. ஜிவி பிரகாஷ் நடித்து தயாரித்திருக்கிற இப்படம் தொடர்பாக சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார் செல்வராகவன். அந்த பெட்டியில் அவரின் அடுத்த படங்களின் அப்டேட்களை கொடுத்துள்ளார்.
அப்பேட்டியில் `புதுப்பேட்டை 2' படத்துக்கான என் பக்கத்து வேலைகளை முடித்துக் கொண்டே இருக்கிறேன். ரொம்ப சுவாரஸ்யமான, சவாலான வேலை. `ஆயிரத்தில் ஒருவன் 2'வுக்கு எல்லாமே சேர்ந்து வர வேண்டும். அது என் கையில் மட்டுமில்லை. உடனே எல்லாம் முடித்துவிடக் கூடியது அல்ல. தனியாக நான் என்ன செய்ய முடியும்? என்ன தான் நான் கேப்டனாக இருந்தாலும், அவர் மட்டும் தனியாக கப்பல் ஓட்டிவிட முடியாது. நிறைய பேர் அவருக்கு தேவை. இது எல்லாம் சேர்ந்து வரும் போது மிக சுவாரஸ்யமான படம் வரும்.
VFX கிராஃபிக்ஸ் எல்லாம் நிறைய முன்னேறிவிட்டது. எனவே பல விஷயங்களை எளிமையாக செய்ய முடியும். அந்த நேரத்தில் நான் செத்து சுண்ணாம்பு ஆனேன் என்பது தான் உண்மை. அவர்களுக்கு எவ்வளவுதான் புரிய வைத்தாலும், நீங்கள் அதிகமாக கேட்கிறீர்கள், உங்கள் பட்ஜெட்டுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்பதுதான் காதில் கேட்கும். அவர்களுடன் போராட வேண்டும். இப்போது அப்படி இல்லாமல் பெரிதாக வளர்ந்திருக்கிறோம்.
7ஜி படத்துக்கான வேலைகள், இன்னும் கொஞ்சம் தான் பாக்கி இருக்கிறது. இரண்டு ஷெட்யூல் செல்ல வேண்டி இருக்கிறது. இந்த வருடத்தில் `மெண்டல் மனதில்', ‘7G 2’ இரண்டும் வெளியாகிவிடும். அது உறுதியாக தெரியும். இவை எல்லாம் இல்லாமல் இன்னொரு கதை ஒன்று எழுதி வருகிறேன். அதை சரியான நேரம் வரும் போது சொல்கிறேன்." எனக் கூறியுள்ளார் செல்வராகவன்.

