Vetrimaaran
VetrimaaranAadukalam

"ஆடுகளத்தில் அந்தப் பாட்டு வெச்சிருக்க கூடாது... Politically Incorrect" - வெற்றிமாறன் | Aadukalam

நான் `ஆடுகளம்' படத்தை 15 வருடங்களாக பார்க்கவே இல்லை. ஒரு படம் எடுக்கும் வரை தான் அது நம் கையில் இருக்கும், எடுத்த பிறகு அதைக் கடந்து வந்துவிட வேண்டும்.
Published on

ம.தொல்காப்பியன் எழுதிய `ஆடுகளம் காட்சிய நுட்பம்' மற்றும் `அதிர்விகளும் காட்சிமையும் EFFECTS & CINEMA LANGUAGE' என்ற இரு புத்தகங்களின் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் இயக்குநர் வெற்றிமாறன் கலந்து கொண்டார். அவர் பேசிய போது "எல்லோரை போலவும் தொல்காப்பியன் அவர் எழுதும் விமர்சனங்கள் மூலம் தான் எனக்கும் அறிமுகம். அவரிடம் எனக்கு பிடித்ததே, ஒருவரை பிடிக்கிறது என்பதற்காக அவரை விமர்சிக்க தயங்கமாட்டார், பிடிக்காதவர் என்பதற்காக பாராட்டாமல் இருக்கமாட்டார். அவர் என்னை சந்தித்த போது ஆடுகளம் எனக்கு மிகவும் பிடித்த படம், அதை பற்றி ஒரு புத்தகம் எழுதிக் கொண்டிருக்கிறேன், ரொம்ப வருடங்களாக எழுதுகிறேன் என கூறினார். நாம் எடுத்த ஒரு படம் அவருக்கு புத்தகம் எழுதுவதற்கான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றால், அது அந்தப் படம் அவருக்கு கொடுத்த அனுபவம். இதற்கு நான் பொறுப்பில்லை என்று நினைக்கிறேன்.

Vetrimaaran
2025 Recap | டாப் 10 வசூல் செய்த தமிழ் படங்கள்! | Coolie | GBU | Dragon

`ஆடுகளம்' Politically Incorrect

இங்கு பேசிய பலரும் ஆடுகளம் பற்றி பேசினார்கள். நான் `ஆடுகளம்' படத்தை 15 வருடங்களாக பார்க்கவே இல்லை. ஒரு படம் எடுக்கும் வரை தான் அது நம் கையில் இருக்கும், எடுத்த பிறகு அதைக் கடந்து வந்துவிட வேண்டும். ஆனால், அப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியை சமீபத்தில் பார்த்த போது ஒன்று மட்டும் எனக்கு தோன்றியது. இப்படி ஒரு க்ளைமாக்ஸை எடுக்கும் தைரியம் இன்று நமக்கு வருமா என தெரியவில்லை என என் குழுவிடம் கூறினேன். மற்றபடி ஆடுகளம் படம் தொல்காப்பியனை ஒரு புத்தகம் எழுத தூண்டி இருக்கிறது, இதனை எழுதியதற்காக அவருக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

ஆடுகளம் திரைப்படத்தில் வி.ஐ.எஸ்.ஜெயபாலன்
ஆடுகளம் திரைப்படத்தில் வி.ஐ.எஸ்.ஜெயபாலன் ட்விட்டர்

அந்த காலகட்டத்தில் politically சில விஷயங்கள் சரியாக இருந்திருக்கலாம். இந்த காலகட்டத்தில் இருந்து பார்க்கையில் ஆடுகளத்தில் politically தவறான விஷயங்கள் நிறைய இருக்கிறது. அதனை விமர்சனத்திற்கு உட்படுத்த நான் எப்போதும் தயாராகவே இருக்கிறேன். என்னை சீர்படுத்த நிறைய கற்றுக் கொண்டே இருக்கிறேன். குறிப்பாக அப்படத்தில் மிகவும் பிரபலமான பாட்டு உண்டு, அது இல்லாமல் இருந்திருக்கலாம் என தோன்றும், ஆனால் அந்த நேரத்தில் அது நன்றாக இருந்தது என வைத்துவிட்டோம்" என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com