\
A R Rahman about Bharathiraja
A R Rahman, Bharathirajax page

"வாழ்க்கைக் கதைகளை உலகிற்கு அறிமுகப்படுத்தியதற்கு நன்றி!" - ஏ.ஆர்.ரஹ்மான் | Bharathiraja

தமிழ் கிராமங்களின் காதலையும், உயிரோட்டத்தையும் உங்களைப்போல யாரும் திரையில் காட்டவில்லை.
Published on

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான பாரதிராஜா (84), கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த நிலையில் இன்று அதிகாலை காலமானார். அவருடைய மறைவுக்கு பிரபலங்களும், அரசியல் பிரமுகர்களும் அஞ்சலி செலித்தி வருகின்றனர்.

பாரதிராஜாவின் மறைவுக்கு தனது இரங்கலை பதிவிட்டுள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், "தமிழ் கிராமங்களின் காதலையும், உயிரோட்டத்தையும் உங்களைப்போல யாரும் திரையில் காட்டவில்லை. உங்கள் படைப்புகள் தலைமுறைகளைத் தாண்டி பலருக்கு ஊக்கமளித்துக் கொண்டே இருக்கும். என் இசையை தென்னிந்தியாவின் மிகத் தொலைதூர கிராமங்களுக்குக் கொண்டுசென்றதற்கும், அந்த மக்களின் வாழ்க்கைக் கதைகளை உலகிற்கு அறிமுகப்படுத்தியதற்கும் நன்றி. அமைதியாக இளைப்பாறுங்கள், பாரதிராஜா அவர்களே" எனப் பதிவிட்டுள்ளார்.

பாரதிராஜா இயக்கிய `கிழக்கு சீமையிலே', `கருத்தம்மா', `அந்திமந்தாரை', `தாஜ்மஹால்', கண்களால் கைது செய்' போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ளார் ஏ ஆர் ரஹ்மான். மேலும் பாரதிராஜா பாடியுள்ள ஒரே ஒரு பாடல் `காடு பொட்டக்காடு' (கருத்தம்மா) பாடலுக்கும் ரஹ்மான்தான் இசை என்பது குறிப்பிடத்தக்கது.

A R Rahman about Bharathiraja
ரூ.5,000 கேட்ட ரஜினி.. ரூ.3000 மட்டுமே கொடுத்த பாரதிராஜா!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com