\
A film based on Genz Love
New Tamil FilmKollywood

ஜென்-ஸி தலைமுறையின் Fun, Friendship, Love பேசும் படம்!

சிரிப்புக்கு நடுவே காதல், கலாட்டாவுக்கு நடுவே பாசம், எதிர்பாராத சூழ்நிலைகளுக்கு நடுவே emotion என ரசிக்கவும் feel பண்ணவும் வைக்கும் ஒரு ஜாலியான திரை அனுபவமாக படம் உருவாகி வருகிறது.
Published on

ரோஷன், சபரி கணேஷ், அஸ்மிதா மற்றும் வர்ணா நடிப்பில் சீயோன் ராஜா இயக்கம் படம் சிறப்பு பூஜையுடன் உற்சாகமாக தொடங்கியுள்ளது. மேலும், ரமேஷ் கண்ணா கதாநாயகனின் தந்தையாகவும், சுஜாதா (பருத்திவீரன்) தாயாகவும் நடிக்கின்றனர். அதோடு அஸ்மிதா (மஸ்காரா), கஞ்சா கருப்பு, லொள்ளு சபா சுவாமிநாதன், மதுரை காளையன் மற்றும் சிங்கமுத்து உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்துள்ளனர்.

இன்றைய ஜென்-ஸி தலைமுறையின் fun, friendship, love மற்றும் family vibe-ஐ மையமாகக் கொண்டு உருவாகும் இந்த புதிய படத்துக்கு டாக்டர் எஸ். கார்த்திகேயன் கதை, வசனம் எழுதி தயாரிக்கிறார். இப்படம், இன்றைய இளம் தலைமுறையின் வாழ்க்கை முறை, நட்பு, காதல், குடும்ப உறவுகள் மற்றும் அவர்களைச் சுற்றி நிகழும் சுவாரஸ்யமான சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாகிறது. நம்மைச் சுற்றி தினமும் நடக்கும் விஷயங்கள் எல்லாமே சாதாரணமானவைதான். ஆனால் சரியான மனிதர்கள் ஒன்று சேர்ந்து, சூழ்நிலைகள் எதிர்பாராத விதமாக திரும்பும்போது… அந்தச் சாதாரண விஷயங்களே செம கலாட்டாவாக மாறிவிடும்.

A film based on Genz Love
யஷுக்கு நல்ல Combackஆக அமைந்ததா டாக்ஸிக்? | Toxic Review | Yash | Nayanthara

அப்படிப்பட்ட சம்பவங்களை மையமாகக் கொண்டு, நட்பு, காதல், குடும்ப உறவுகள், misunderstanding, comedy என ஒன்றுக்குள் ஒன்று பின்னிப் பிணையும் கதையாக இப்படம் உருவாகிறது. சிரிப்புக்கு நடுவே காதல், கலாட்டாவுக்கு நடுவே பாசம், எதிர்பாராத சூழ்நிலைகளுக்கு நடுவே emotion என ரசிக்கவும் feel பண்ணவும் வைக்கும் ஒரு ஜாலியான திரை அனுபவமாக படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களும், தலைப்பு உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகளும் விரைவில் வெளியாகி, சினிமா ரசிகர்களை கொண்டாட வைக்கும் வகையில் படக்குழு தற்போது fun mode-ல் பரபரப்பாக பணியாற்றி வருகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com