25 changes done in Parasakthi
SKParasakthi

`இந்தி' முதல் `அண்ணாவின் முழக்கம்' வரை... பராசக்தியின் 25 மாற்றங்கள்! | Parasakthi

சிவகார்த்திகேயன் - சுதா கூட்டணியின் படம் `பராசக்தி'. ஜன 10 வெளியாகவுள்ள நிலையில், சென்சார் சிக்கல் முடிந்து இன்று காலையில் தான் U/A சான்றிதழ் வழங்கப்பட்டது. இப்படத்தில் சென்சார் சொன்ன 25 நீக்கம், மாற்றம் நடந்துள்ளதாக தகவல் பரவி வருகிறது. அவை கீழே...
Published on

நீதியான `தீ'

1. ஒரு மொழியை திணிப்பது, அந்நாட்டின் சிதைவுக்கு வழிவகுக்கும் என்ற வசனம் வாய்ஸ் ஓவரில் மாற்றம்

2. `தீ பரவட்டும்' என்ற வாசகம் `நீதி பரவட்டும்' என மாற்றம்

3. `பட்டு நூலா' என்ற வார்த்தை மாற்றம்

4 - 10 `சிறுக்கி', `மயித்துக்கு', `கொடியில காய வெச்ச துணி மாதிரி' உள்ளிட்ட 7 வார்த்தைகளை நீக்கியுள்ளனர்.

25 changes done in Parasakthi
Parasakthi
25 changes done in Parasakthi
"Intentம் Contentம் நன்றாக இருக்கும் படம் `பராசக்தி' " - சிவகார்த்திகேயன் | SK | Parasakthi

11. எரிப்பது போன்ற காட்சிகள்  50 சதவீதம் குறைப்பு

12. `இந்தி என் கனவை அழித்தது' என்ற வசனமும், வாசகமும் `என் ஒரே கனவை இந்தி திணிப்பு எரித்தது' என மாற்றம்

25 changes done in Parasakthi
Ravi Mohan

13. `இந்தி கத்துக்கிட்டு' என்ற வார்த்தை நீக்கம்

14. `இந்தி அரக்கி' என்ற வார்த்தை ’அரக்கி’ என மாற்றம்

15 `இந்தி அரக்கி' என்ற பதாகை உள்ள காட்சி நீக்கம்

16. `Anti National scum' என்ற வார்த்தை வசனத்தில் இருந்தும் சப் டைட்டிலில் இருந்தும் நீக்கம்

17. `கொல்டி' உட்பட இரு வார்த்தைகள் நீக்கம்

18. `வர சப்பாத்தி' என்ற வார்த்தை நீக்கம்

25 changes done in Parasakthi
Parasakthi


19. போஸ்ட் ஆபீஸ் பலகையில் மாட்டுச் சாணம் உள்ளது போன்ற காட்சி நீக்கம்

20. `இந்தி' என்ற வார்த்தை சப் டைட்டிலில் சில இடங்களில் நீக்கம்

21. துப்பாக்கிச் சூட்டில் தன் குழந்தையுடன் இறந்துபோகும் காட்சி நீக்கம்

25 changes done in Parasakthi
"பொறுப்பாகவும் பயமாகவும் உணர்ந்தேன்" - அண்ணாவாக நடித்தது பற்றி சேத்தன்! | Parasakthi

22. எங்களை நீக்கிவிட்டு முதல் இந்த நாட்டை ஆளுகிறான் என்று பொருள் வரையான வசனம் முழுவதும் நீக்கம்.

பேரறிஞர் அண்ணாவின் முழக்கம்தான் அது. படத்திலிருந்து இந்தக் காட்சி நீக்கப்பட்டாலும், இப்போது சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. திமுக ஆட்சி முதன்முதலாக பதவியேற்று ஓராண்டு முடிந்து அண்ணாதுரை ஆற்றிய உரை அது. “முப்பெரும் சாதனைகளை இந்த ஓராண்டிலே திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி, என்னுடைய ஆட்சி செய்திருக்கிறது. 1. சுயமரியாதைத் திருமணத்திற்கு சட்ட வடிவம், 2. தாய்த் திருநாட்டிற்குத் தமிழ்நாடு என்று பெயர், 3. இருமொழிக் கொள்கை - தமிழ், ஆங்கிலம்... இதையெல்லாம் மாற்றவேண்டும் என்று இப்போது துடிப்பதாக நான் கேள்விப்படுகிறேன்.

25 changes done in Parasakthi
Parasakthi

சரி, நீங்கள் எங்களைப் பதவியைவிட்டு விலக்கலாம்; அது முடியுமா? என்று நான் சவால்விட மாட்டேன்; முடியும். ஆனால், எங்களை நீக்கிவிட்டு நீங்கள் வந்து உட்கார்ந்தால், இதையெல்லாம் நாம் இல்லாதபோது, அவர்கள் அல்லவா செய்துவிட்டார்கள். ஆகவே, அதையெல்லாம் மாற்றலாம் என்று நினைத்தால், அடுத்த நிமிடம் மாற்றினால் என்னாகும் நம்முடைய நிலை, நாட்டினுடைய நிலை எப்படிப்பட்ட எதிர்ப்பு கிளம்பும் என்று நினைக்கும்போது, ஓர் அச்சம் உங்களை உலுக்கும் - அந்த அச்சம் எவ்வளவு காலம் உங்களிடம் இருக்கிறதோ, அவ்வளவு காலமும் அண்ணாதுரைதான் இந்த நாட்டை ஆளுகிறான் என்று பொருள்'' என்பதே அந்த பேச்சின் முழு வடிவம்.

23. கிராமத்தில் நடக்கும் படுகொலைக் காட்சிகள், இளம் தாயின் கொலை, பிணங்களின் காட்சி போன்றவை பாதியாக குறைப்பு

24. UPSC ரத்தாவது, Postal Money Order போன்ற காட்சிகளில் இது கற்பனை காட்சி என்ற  எழுத்து இணைக்க வேண்டும்.
 

பராசக்தி
பராசக்தி

25. இப்படம் கற்பனைக் கதையே என்ற disclaimer-இன் நேரம் அதிகப்படுத்த வேண்டும், மேலும் அந்த முழு வாசகமும் குரல் பதிவில் தமிழில் படிக்கப்பட வேண்டும்.

ஆகிய 25 மாற்றங்கள் பராசக்தியில் செய்யப்பட்டுள்ளன என சொல்லப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com