பிரபல தபேலா இசைக்கலைஞர் ஜாகிர் உசைன்முகநூல்
சினிமா
காலமானார் பிரபல தபேலா இசைக்கலைஞர் ஜாகிர் உசைன்!
ஜாகிர் உசைனுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிரபல தபேலா இசைக்கலைஞர் ஜாகிர் உசைன் காலமானார். அவருக்கு வயது 73. அமெரிக்காவில் வசித்து வந்த ஜாகிர் உசைனுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், சான் பிரான்சிஸ்கோவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் உயிரிழந்துவிட்டதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். 5 கிராமி விருதுகள் உள்பட பல்வேறு விருதுகளை ஜாகிர் உசைன் வென்றுள்ளார்.
இசைத்துறையில் அவரது பங்களிப்பைப் பாராட்டி 1988இல் பத்மஸ்ரீ, 2002இல் பத்ம பூஷண், 2023இல் பத்ம விபூஷண் விருதுகளை வழங்கி மத்திய அரசு கவுரவித்தது.