பாக்யராஜ் மறைவு| "எமலோகத்தில் யார் இவரை.. திரைக்கதை எழுத அழைத்தார்கள்" - டி.ராஜேந்தர் உருக்கம்!
தமிழ் திரைப்பட உலகின் முன்னணி இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர் கே. பாக்யராஜ் திடீர் மாரடைப்பால் 73 வயதில் காலமானார். அவரது மறைவு திரையுலகையும் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சமகால இயக்குநர் டி.ராஜேந்தர், சமீபத்திய நிகழ்ச்சியில் இருவரும் பங்கேற்ற நினைவுகளை பகிர்ந்து, எமலோகத்தில் யார் இவரை கதை எழுத அழைத்தார்கள் என உருக்கமாக பேசியுள்ளார்.
தமிழ் திரைப்பட உலகின் முன்னணி இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் வசனகர்த்தாவாகப் புகழ்பெற்ற கே. பாக்யராஜ் காலமானார். அவருக்கு வயது 73. திடீர் மாரடைப்பு ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது மறைவு தமிழ் திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த நிலையில் அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் பாக்யராஜின் சமகால இயக்குநரான டி.ராஜேந்தர் உருக்கமான இரங்கல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில், சமீபத்தில் திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவுசெய்ததற்காக பாக்யராஜுக்கு நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்க அவர் என்னை அழைத்தார். நாம் இருவரும் சேர்ந்து நடிக்கவில்லையே என வருத்தப்பட்டார். நான் நிகழ்ச்சியில் பங்கேற்று மனதார பாராட்டிவிட்டு வந்தேன். எமலோகத்தில் யார் இவரை கதை, திரைக்கதை எழுத அழைத்தார்கள் என்று தெரியவில்லை.. விதி விளையாடிவிட்டது என பேசியுள்ளார்.

