மவுஸை இழந்த எதிர்நீச்சல்..? புதிதாக களமிறங்கும் சீரியல்.. சன் டிவியின் புதிய அஸ்திரம்!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலின் மவுசு நாளுக்கு நாள் குறைந்து வருவதால், அந்த நேரத்தில் புது சீரியலை களமிறக்க சன் டிவி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எதிர்நீச்சல்
எதிர்நீச்சல்புதிய தலைமுறை

ஆதி குணசேகரனாக மாரிமுத்து நடித்தவரை எதிர்நீச்சல் சீரியல் பெரும் வரவேற்பை பெற்றுவந்தது. குறிப்பாக அவரது மறைவின்போது, சீரியலை பார்க்காதவர்கள் பலரும் எதிர்நீச்சலில் என்ன இருக்கிறது என்று தேடி பார்த்ததில் டிஆர்பி ரேட்டிங் உச்சத்தை தொட்டது. இந்த நிலையில், ஆதி குணசேகரனாக சில நாட்கள் கழித்து வேல ராமமூர்த்தி களமிறங்கியபோதும், அவர் அந்த பாத்திரத்தில் சோபிக்கவில்லை. இதனால், சீரியலுக்கு கிடைத்த வரவேற்பு சரிந்து வருவதாக தெரிகிறது.

அந்த தொலைக்காட்சியில் பல தொடர்கள் ஒளிபரப்பானாலும், நல்ல வரவேற்பை பெறும் சீரியல்களே பிரைம் டைமில் ஒளிபரப்பாகும். ஒருகட்டம் வரை ஹிட் லிஸ்ட்டில் இருந்த எதிர்நீச்சல் இப்போது, அதனை இழந்து வருவதால், எதிர்நீச்சலை மட்டுமே நம்பி இருக்காமல், சன் டிவி புது ஆயுதத்தை கையில் எடுத்துள்ளதாம். நீண்ட நாட்களாக ஓடிக்கொண்டிருக்கும் பாண்டவர் பூமி இப்போது முடியும் நிலையில் இருப்பதால், அதற்கு பதிலாக ‘பூவா தலையா’ என்ற புது சீரியலை கொண்டுவர இருக்கிறதாம். இதில், முக்கிய பாத்திரத்தில் 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் நடிகை சித்தாரா வர இருக்கிறார்.

ஹீரோவாக கலர்ஸ் சேனலின் பச்சக்கிளி நாடகத்தில் நடித்த கிஷோர் வர, நாயகியாக ஜீ தமிழில் ஒளிபரப்பான நினைத்தாலே இனிக்கும் நாடகத்தில் நடித்த ஸ்வேதா வருகிறார். கிராமத்து கதையாக இல்லாமல், நகரத்தில் ஏற்படும் அன்றாட பிரச்சனைகளை பேசும் கதையாக வர இருக்கும் இந்த சீரியலை வைத்து, டிஆர்பி ரேட்டிங்கை அதிகரிக்க முயற்சிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com