\
பாடகி சுசித்ரா வெளியிட்ட  புதிய வீடியோ!

பாடகி சுசித்ரா வெளியிட்ட புதிய வீடியோ!

பாடகி சுசித்ரா வெளியிட்ட புதிய வீடியோ!
Published on

பிரபல பாடகி சுசித்ரா தனது புதிய வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

கடந்த ஐந்து மாதங்களுக்கு முன் சுசிலீக் டிவிட்டர் பக்கத்தில் நடிகர் நடிகைகளின் ஆபாச படங்களும், வீடியோக்களும் வெளியிடப்பட்டன. இதனால் தமிழ்திரையுலகம் அதிர்ச்சியடைந்தது. இதனை பாடகி சுசித்ரா வெளியிட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில், தனது டிவிட்டர் பக்கத்தை ஹேக் செய்யப்பட்டுள்ளது. தனது பெயரில் மற்றவர்கள்  அந்த புகைப்படங்களை வெளியிட்டு வருவதாகவும், தனக்கு அதில் தொடர்பில்லை எனவும் மறுத்து வந்தார். இதுகுறித்து காவல்துறையில் புகாரும் அளித்திருந்தார். 

அதன் பிறகு தற்போது, ஜெய்சங்கர், ஜமுனா, நாகேஷ், குட்டி பத்மினி உள்ளிட்டோர் நடிப்பில் 1965ம் ஆண்டு வெளியான குழந்தையும் தெய்வமும் படத்தில் வரும் அன்புள்ள மான்விழியே பாடலை பாடி அந்த வீடியோவை சுசித்ரா யூடியுப்பில் பதிவேற்றம் செய்துள்ளார். இந்த வீடியோ ப்பலரும் ரசித்து வருகின்றனர். 
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com