சிவகார்த்திகேயன் - சுதா கொங்கரா புதிய கூட்டணி... படக்குழுவுடன் இணையப்போகும் தெலுங்கு நடிகை!
சிவகார்த்திகேயன் நடிக்கும் புறநானூறு படத்தில் தெலுங்கு நடிகை ஸ்ரீலீலா சிவாவுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார்.
அண்மையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் வசூல் நீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. சுமார் 300 கோடி ரூபாய் வரை வசூலித்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது சிவா, ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 23ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையே சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் புறநானூறு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் அவர்.
இப்படத்தில் நடிக்க ஏற்கனவே நடிகர் சூர்யா ஒப்பந்தமாகியிருந்த நிலையில், சில காரணங்களால் இப்படத்தில் இருந்து அவர் விலகியுள்ளார். இப்படம் இந்தி திணிப்பு தொடர்பான கதை என்று கூறப்படும் நிலையில், இதில் வில்லனாக நடிக்க ஜெயம் ரவி மற்றும் நிவின் பாலி ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகை ஸ்ரீலீலா நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இப்படம் மூலம் ஸ்ரீலீலா தமிழில் அறிமுகமாவார் என எதிர்பார்க்கப்படுகிறது.