குஷ்பு
குஷ்புweb

அத்துமீறிய பிரபல ஹீரோ... காலணியை காட்டிய சம்பவம்.. அன்று நடந்ததை வெளிப்படையாக போட்டுடைத்த குஷ்பு!

படப்பிடிப்பில் ஒரு ஹீரோ தவறான நோக்கத்துடன் நடந்து கொண்டதாக நடிகை குஷ்பு கூறியிருப்பது, திரைத்துறையில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
Published on

தமிழ் சினிமாவின் 90 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர், குஷ்பு... சின்னத் தம்பி நந்தினி கதாபாத்திரத்தின் மூலம் தமிழக மக்களின் மனதில் இடம்பிடித்த குஷ்பு, இப்போது அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார்...

கோவாவில் நடந்து வரும் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்ட அவர், அங்கு நடத்தப்பட்ட விவாதத்தில் பங்கேற்றார்.. திரைத்துறையில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து பேசிய அவர், அதிர்ச்சிகர தகவல் ஒன்றை பகிர்ந்து கொண்டார்..

குஷ்பு வெளிப்படுத்திய சம்பவம்..

விவாதத்தில் பேசிய குஷ்பு, திரைத்துறைக்கு வந்த காலகட்டத்தில் ஒரு ஹீரோ தன்னிடம் தவறான நோக்கத்தில் நடந்து கொண்டதாகக் கூறினார்.. அவரிடம் தனது காலணியை காண்பித்து எச்சரித்த பின், அந்த ஹீரோ தொல்லை செய்யவில்லை என்றார்..

குஷ்பு
குஷ்பு

பிறர் தம்மிடம் தவறாக நடந்து கொள்ளும்போது, அதுகுறித்து வெளிப்படையாக பேச பெண்கள் முன்வர வேண்டுமென குஷ்பு கேட்டுக் கொண்டுள்ளார். எல்லாவற்றையும் விட தமக்கு சுயமரியாதைதான் முக்கியம் என்ற்ம், நம்மை நாம் மதித்தால்தான் பிறரும் மதிப்பார்கள் என்று குஷ்பு தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com