\
Sivakarthikeyan’s Post: What’s Behind It
சிவகார்த்திகேயன்web

“Good Content Always Wins Big” – சிவகார்த்திகேயன் பதிவின் பின்னணி என்ன?

’மண்டாடி’ படக்குழுவுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் தனது X பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Published on

சூரி நடிப்பில் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. படத்தின் ஆக்‌ஷன் காட்சிகள், குறிப்பாக கிளைமாக்ஸ் படகுக் காட்சிகள் வெகுவாக பாராப்பட்டடுகிறது. இந்நிலையில், ‘மண்டாடி’ படக்குழுவுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் தனது X பக்கத்தில் வாழ்த்து தெரிவித்தார். சூரியின் கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சிக்கு பலன் கிடைத்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், “Good content always wins big!” என்று பதிவிட்டிருந்தார்.

Soori
SooriMandaadi

ஆனால், சிவகார்த்திகேயனின் இந்த ஒரு வரிதான் தற்போது சமூக வலைதளங்களில் புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது. இதற்கு முக்கியக் காரணம், 2022-ம் ஆண்டு வெளியான ‘சர்தார்’ மற்றும் ‘பிரின்ஸ்’ படங்களின் ரிலீஸ் சம்பவம். அந்த சமயத்தில் சிவகார்த்திகேயனின் ‘பிரின்ஸ்’ படமும், கார்த்தியின் ‘சர்தார்’ படமும் ஒரே நாளில் வெளியாகின. அபபோது ‘சர்தார்’ படத்திற்கு ‘பிரின்ஸ்’ படத்தைவிட சிறப்பான விமர்சனங்கள் கிடைத்தது.

Sivakarthikeyan’s Post: What’s Behind It
வித்தியாசமான களம்.. வலுவான ஆட்டம்.. ’மண்டாடி’ விமர்சனம் | Mandaadi Review | Soori

சூர்யா, தனது சகோதரர் கார்த்தியின் ‘சர்தார்’ படத்தை பாராட்டி X தளத்தில் பதிவு செய்திருந்தார். அந்தப் பதிவிலும் சூர்யா பயன்படுத்திய முக்கியமான வார்த்தைகள் “Good content always wins big!” என்பதுதான். ‘சர்தார்’ படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைப்பதை குறிப்பிட்டு, படக்குழுவினரை சூர்யா வாழ்த்தியிருந்தார். தற்போது 2026-ல் அதே “Good content always wins big!” என்ற வார்த்தைகளை சிவகார்த்திகேயன் பயன்படுத்தி சூரி படத்தை பாராட்டி இருக்கிறார்.

சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன்web

இதனால், “சிவகார்த்திகேயன் சூர்யாவை மறைமுகமாக தாக்கும் வகையில் இந்த பதிவை போட்டாரா?” என்ற கேள்வியும் சமூக வலைதளங்களில் எழுந்துள்ளது. அதே நேரத்தில், இது சூரியை பாராட்டுவதற்காக சிவகார்த்திகேயன் இயல்பாக பயன்படுத்திய வார்த்தைகளாக மட்டுமே இருக்கலாம் என்றும் சிலர் கூறுகின்றனர். இது திட்டமிட்டதோ, தற்செயலோ “Good content always wins big!” என்ற ஒரு வாழ்த்து, மீண்டும் ஒரு பரபரப்பை கிளப்பிவிட்டிருக்கிறது என்பது மட்டும் உண்மை.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com