சிவாஜியின் ‘திருவிளையாடல்’ 61 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ-ரிலீஸ் - எப்போது தெரியுமா?
தமிழ் சினிமாவின் காலத்தால் அழியாத காவியங்களில் ஒன்றாகத் திகழ்வது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான திருவிளையாடல் திரைப்படம். புராணக் கதைகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இப்படம், சிவபெருமானின் 64 திருவிளையாடல்களில் சிலவற்றை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. ஏ.பி. நாகராஜன் இயக்கத்தில் கடந்த 1965-ஆம் ஆண்டு ஜூலை 31-ம் தேதி வெளியான இப்படத்தில், சிவாஜி கணேசனுடன் சாவித்திரி, கே.பி. சுந்தராம்பாள், நாகேஷ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். வசனங்கள், பாடல்கள், இசை, நடிப்பு எனப் பல அம்சங்களிலும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த இப்படம், இன்றும் தலைமுறைகள் கடந்து கொண்டாடப்படும் ஒரு திரைக்காவியமாகத் திகழ்கிறது.
இந்தச்சூழலில் தான், இத்திரைப்படம் தற்போது டிஜிட்டல் முறையில் மேம்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, இந்தமாதம் 27-ம் தேதி உலகம் முழுவது ரீ-ரிலீஸ் ஆகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், சிவாஜியின் நடிப்பு மற்றும் தமிழ்சினிமாவின் முக்கிய திரைப்படங்களில் ஒன்றாக உள்ள ’திருவிளையாடல்’ படத்தை இளைய தலைமுறையினர் பெரிய திரையில் காண்பதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.

