\
suriya
suriyaKanguva / instagram

கங்குவாவில் விழுந்த மாபெரும் அடி.. மும்மடங்காக எழுந்துநின்ற சூர்யா! முதல் நடிகராக வரலாறு!

’ஒரு படமாவது ஹிட் கொடுக்க சொல்லுங்கப்பா’ என்று விமர்சிக்கப்பட்ட சூர்யா, ’இந்த ஹிட் போதுமா குழந்த’ எனுமளவு தமிழ் சினிமா வரலாற்றில் எந்த நடிகரும் செய்யாத சாதனையை படைக்க உள்ளார்.
Published on: 
Summary

கங்குவா படத்தின் தோல்விக்கு பிறகு, சூர்யா தொடர்ந்து மூன்று 200 கோடி வசூல் படங்களை ஒரே ஆண்டில் கொடுத்து தமிழ் சினிமாவில் புதிய சாதனை படைத்துள்ளார். கருப்பு, விஸ்வநாத் & சன்ஸ், சீன் ஆகிய படங்கள் உலகளவில் மாபெரும் வெற்றியை பெற்றதால், சூர்யாவின் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் மூழ்கியுள்ளனர்.

ஒரு நேரத்தில் விஜய், அஜித் இருவருக்கும் போட்டியாக முன்வரிசையில் இருந்த நடிகர் சூர்யா, அஞ்சான், என்ஜிகே, காப்பான், எதற்கும் துணிந்தவன், கங்குவா என வரிசையாக ஃபிளாப் படங்களை கொடுத்து இவரால் இனி கம்பேக் கொடுக்கமுடியுமா என்ற இடத்திற்கு தள்ளப்பட்டார்.

suriya
suriyainstagram

சூரரைப்போற்று, ஜெய் பீம் போன்ற படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தாலும், ஓடிடியில் வெளியானதால் அவை தியேட்டர் ஹிட்டாக எடுத்துக்கொள்ளப்படவில்லை. இந்தசூழலில் தான் ஒரு படமாவது தியேட்டரில் ஹிட் கொடுக்க சொல்லுங்க, அதுக்கப்புறம் வசூல் பத்தியெல்லாம் பேசலாம் என சூர்யாவும், அவருடைய ரசிகர்களும் கடுமையாக விமர்சிக்கப்பட்டனர்.

singam 2
singam 2singam 2

2013ல் வெளியான சிங்கம் 2 திரைப்படம் தான், உலகளவில் 123 கோடிவரை வசூல் செய்து சூர்யாவின் அதிகபட்ச வசூல் படமாக இருந்துவந்தது. சொந்த இண்டஸ்ட்ரி, பக்கத்து இண்டஸ்ட்ரியில் எல்லாம் சின்ன சின்ன நடிகர்கள் கூட 100 கோடி, 200 கோடி என வசூல் குவித்துவரும் நிலையில், சூர்யா எப்போது கம்பேக் கொடுப்பார் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்தது.

suriya
X-ல் பதிவிட்டு புலம்பிய பிக்பாஸ் பிரபலம்.. போதைப்பொருள் இருப்பதாக சோதனை நடத்தியதால் அதிர்ச்சி!

சூர்யாவின் மாபெரும் கம்பேக்..

இப்படியான சூழலில் தான் இந்தாண்டு மொத்தமும் சூர்யாவின் ஆண்டாக மாறியுள்ளது. கடந்த மே மாதம் வெளியான கருப்பு திரைப்படம் சூர்யாவின் வாழ்நாள் வசூல் சாதனையாக 300கோடிக்கும் மேல் வசூல் செய்து மிரட்டியது. அதுமட்டுமில்லாமல் இந்திய அளவில் சூர்யாவின் முதல் 100 கோடி படமாகவும் அது மாறியது. அதைத்தொடர்ந்து வெளியான விஸ்வநாத் & சன்ஸ் படமும் உலகளவில் 200 கோடி வசூல் செய்து சூர்யாவின் ரசிகர்களுக்கு இரட்டிப்பு கொண்டாட்டத்தை ஏற்படுத்தியது.

Karuppu
Karuppukaruppu

அடுத்தடுத்து 2 ஹிட் படங்களுக்கு பிறகு ஒரே ஆண்டில் 3வது திரைப்படமாக சீன் படத்தை இறக்கினார் சூர்யா. எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையே வெளியான இத்திரைப்படமும் மிகப்பெரிய ஹிட்டாக மாறி, விண்டேஜ் சூர்யாவின் பீக்கையே பீட் செய்துள்ளது. கடந்த 6ஆம் தேதி வெளியான சீன் திரைப்படம் 4 நாளில் 150 கோடி ரூபாய் வரை வசூல் செய்து அசத்தியுள்ளது. விரைவில் 200 கோடி ரூபாய் வசூலை எட்டும் என்பதால், தமிழ் சினிமாவில் ஒரே ஆண்டில் மூன்று 200 கோடி ரூபாய் வசூலை கொடுத்த முதல் நடிகராக சூர்யா சாதனை படைக்கவிருக்கிறார்.

suriya
'வழி தெரியாமல் கூட அரசியலுக்கு நான் வரமாட்டேன்..' - சூர்யா ஓபன் டாக்
actor suriya Scene movie Review
Scene moviescene movie poster

ரஜினி பல 200 கோடி வசூல் படங்களை கொடுத்திருந்தாலும், விஜய் அடுத்தடுத்து 3 ஆண்டுகளில் ஹாட்ரிக் 250 கோடி படங்களை கொடுத்திருந்தாலும், இருவருமே ஒரே ஆண்டில் இரண்டு 200 கோடி படங்களை மட்டுமே கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்தசூழலில் தான் ஒரே ஆண்டில் மூன்று 200 கோடி படங்களை கொடுத்த ஒரே தமிழ் சினிமா நடிகராக சூர்யா சாதனை படைக்கவுள்ளார்.

இது கங்குவா என்ற மாபெரும் டிசாஸ்டருக்கு பிறகு சூர்யாவின் மிகப்பெரிய எழுச்சியை குறிக்கிறது. The One என்பது வெறும் அடைமொழியல்ல உண்மையாக ’தி ஒன்’ தான்தான் என சூர்யா நிரூபித்துள்ளார்..

suriya
ரஜினி, விஜய் யாருமே செய்யாத சம்பவம்.. ’200 கோடி வசூலில் ஹாட்ரிக்..’ சூர்யா செய்யப்போகும் சாதனை!