சிம்பு எக்சர்ஸை செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.
‘ஒஸ்தி’ படத்தின் போது இருந்த சிம்புவின் கட்டுமஸ்தான உடம்பு காலப்போக்கில் காணாமல் போனது. ‘அன்பானவன், அசராதவன், அடங்காதவன்’படத்தில் அவரது உடல் தோற்றத்தை கண்டவர்கள் கதிகலங்கிப் போனார்கள். அவரது ரசிகர்கள் ‘நம்ம சிம்புவா இது’ என அரண்டுப் போனார்கள். எப்போதும் சிம்புவின் ஸ்மார்ட்நஸ்தான் அவரது பலம். அதை இழந்ததை போல அவரது தோற்றம் இருந்தது. கம்பேக் அவர் பழைய சிம்புவாக திரும்ப வேண்டும் என பலரும் கருத்திக் கொண்டிருந்த நிலையில் மீண்டும் பழைய தோற்றத்திற்கு திரும்பி வருகிறார் சிம்பு. அதற்கான ஒர்க் அவுட் வீடியோவை தான் அவரது ரசிகர்கள் தரப்பில் சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருக்கிறார்கள்.
மணிரத்னம் இயக்கும் புதிய படத்திற்காக இளமை தோற்றத்திற்கு சிம்பு திரும்பி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.