\
நிறைவேறியது ஸ்ருதியின் சிறு வயது ஆசை

நிறைவேறியது ஸ்ருதியின் சிறு வயது ஆசை

நிறைவேறியது ஸ்ருதியின் சிறு வயது ஆசை
Published on

பொற்கோயிலுக்குச் செல்ல வேண்டும் என்கிற தனது சிறுவயது ஆசை நிறைவேறியிருப்பதாக நடிகை ஸ்ருதி ஹாசன் கூறியுள்ளார்.

விளம்பர படம் ஒன்றில் நடிப்பதற்காக சண்டிகர் சென்ற ஸ்ருதிஹாசன், சீக்கியர்களின் மிகப்பழமையான குருத்வாரான பொற்கோயிலுக்கு செல்ல நினைத்தார். இதையடுத்து அங்கிருந்து அமிர்தரஸ் சென்ற அவர், பொற்கோயிலில் நேற்று இரவு நடந்த சிறப்பு வழிபாட்டில் கலந்துகொண்டார்.

இதுபற்றி ஸ்ருதிஹாசன் கூறும்போது, ‘பொற்கோயிலுக்குச் செல்ல வேண்டும் என்பது எனது சின்ன வயது ஆசை. இதுவரை எனக்கு அந்த வாய்ப்புக் கிடைக்கவில்லை. இப்போதுதான் கிடைத்தது. அங்கு சென்று வந்த மனநிலையை என்னால் விவரிக்க முடியாது. இங்குள்ள மக்களின் அன்பையும் என்னால் மறக்க முடியாது. அவர்களுக்கு நன்றி’ என்று தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com