“ஐ யாம் சோ சேட்” -ஸ்ருதிஹாசன் காதலருக்கு என்னாச்சு?

“ஐ யாம் சோ சேட்” -ஸ்ருதிஹாசன் காதலருக்கு என்னாச்சு?

“ஐ யாம் சோ சேட்” -ஸ்ருதிஹாசன் காதலருக்கு என்னாச்சு?
Published on

நடிகை ஸ்ருதிஹாசனின் காதலர் மிக சோகமாக ஒரு ட்விட்டை போட்டுள்ளார்.

கமல்ஹாசனின் மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன் லண்டனைச் சேர்ந்த மைகேல் கார்சலை காதலித்து வருகிறார். அந்தக் காதலுக்கு அவரது தந்தையும் சம்மதம் தெரிவித்துவிட்டார். விரைவில் இவர்களது திருமணம் நடைபெறும் என பலரும் எதிர்பார்த்து வருகின்றனர். சில மாதங்கள் முன்பாக திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக சென்னை வந்த மைகேல் மிக சகஜமாக ஸ்ருதி உறவினர்களுடன் கலந்து பேசினார். அந்தப் புகைப்படங்கள் வைரலாக சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டது.  

இந்நிலையில் சமீபத்தில் மும்பை வந்த மைகேல் தனது காதலியான ஸ்ருதிஹாசனுடன் தங்கி இருந்தார்.  மீண்டும் லண்டன் சென்றுவிட்ட நிலையில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் “ஒவ்வொரு முறையும்  இங்கிருந்து புறப்படும் போதும் நான் மிக சோகமாகிவிடுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். அதனை படித்த ஸ்ருதி, “நம்முடன் இருக்க வேண்டும் என நினைக்கும் ஒருவரை விமான நிலையத்தில் அனுப்பிவிட்டு குட் பை சொல்வது கொடுமையாக உள்ளது” என்றுள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com