இனிமேல் ஸ்ருதிஹாசன் ஹீரோவுக்கு மட்டும் ஜோடி இல்லை?!

இனிமேல் ஸ்ருதிஹாசன் ஹீரோவுக்கு மட்டும் ஜோடி இல்லை?!

இனிமேல் ஸ்ருதிஹாசன் ஹீரோவுக்கு மட்டும் ஜோடி இல்லை?!
Published on

ஸ்ருதிஹாசன் இனிமேல் ஹீரோவிற்கு மட்டும் ஜோடியாக நடிக்கப்போவதில்லை. அவர் வில்லனுக்கும் ஜோடியாக நடிக்க இருக்கிறார்.

சில மாதங்களாகவே ஸ்ருதிஹாசன் எந்தப் படங்களிலும் நடிக்கவில்லை. அவரது கால்ஷீட் டைரி காலியாகவே உள்ளது. படங்களில் ரொமான்ஸ் செய்து வந்த அவர் இப்போது நிஜமான ரொமான்ஸ் மூடில் இருந்து வருகிறார். எங்குப் போனாலும் அவரது காதலனும் லண்டன் நடிகருமான மைக்கேல் கார்சேல் உடன் ஜோடிப்போட்டு போஸ் கொடுத்து வருகிறார். இவரது காதலுக்கு அப்பா கமல் எப்போதோ சம்மதம் தெரிவித்துவிட்டார். எனவே திருமணத்திற்கு தடைகள் இல்லை. 

இந்நிலையில் ரொமான்ஸ் மூடில் இருந்து திரும்ப சினிமா மோடிற்கு திரும்பி இருக்கிறார் ஸ்ருதி. விஜய் நடிப்பில் உருவான ‘துப்பாக்கி’யில் வில்லனாக நடித்த வித்யுத் ஜம்வாலுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார் ஸ்ருதி. இந்தப் படம் பாலிவுட்டில் தயாராக உள்ளது. இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளது. ‘சங்கமித்ரா’ சர்ச்சைக்கு பிறகு எந்தப் படங்களிலும் நடிக்காமல் இருந்து வந்த இவர் மீண்டும் தமிழுக்கு திரும்பாமல் பாலிவுட்டிற்கு போய் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com