தற்போது இசை பயணத்தின் மீது கவனம் திருப்பியிருக்கிறார் நடிகை ஸ்ருதி ஹாசன். இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ள இவர், தன் வாழ்நாள் கனவான லண்டனில் உள்ள டரவ்படூர் (Troubadour) எனும் இசை நிகழ்ச்சி நடத்தும் அரங்கில் சமீபத்தில் பாடினார். இந்த வருடம் வெளிவர இருக்கும் அவரது சிங்கிள் டிராக் பாடல்களில் சிலவற்றை இந்நிகழ்ச்சியில் பாடினார். இதில் தனக்கு சிறந்த வரவேற்பு கிடைத்ததாக தெரிவித்துள்ளார் ஸ்ருதி. இந்நிகழ்ச் சியின் டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்தன என்பது அவரை இன்னும் மகிழ்ச்சியாக்கி இருக்கிறது.
உலகின் சிறந்த இசையமைப்பாளர்களான பாப் டைலான், எல்டான் ஜான், அட்லே, எட்ஸீரன் போன்றார் இந்த அரங்கில் இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளனர். இப்புகழ்பெற்ற அரங்கு 1954-ல் ஒரு காபி ஹவுஸாகத் தொடங்கப்பட்டது.
தி நெட் ( The Ned ) என்ற பெயரில் லண்டனில் உள்ள அரங்கில் கடந்த செப்டம்பரில் நடந்த ஸ்ருதி ஹாசனின் இசை நிகழ்ச்சி யும் சிறப்பான விமர்சனங்களை பெற்றது.
மேலும் நியூயார்கில் உள்ள மேடிஷன் அவென்யூவில் கடந்த வருடம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி நடந்த The Indian Day Parade எனும் சுதந்திர தின கூட்டத்தில் இவர் முழங்கிய வந்தே மாதரம் அனைவரின் பாராட்டைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.