'ஸ்ருதி ஹாசனுடன் ஏற்கெனவே திருமணமாகிவிட்டது ' - உறவு குறித்து காதலர் தகவல்!

'ஸ்ருதி ஹாசனுடன் ஏற்கெனவே திருமணமாகிவிட்டது ' - உறவு குறித்து காதலர் தகவல்!
'ஸ்ருதி ஹாசனுடன் ஏற்கெனவே திருமணமாகிவிட்டது ' - உறவு குறித்து காதலர் தகவல்!

எங்களுக்கு ஏற்கெனவே திருமணமாகிவிட்டது எனஸ்ருதி ஹாசனுடனான உறவு குறித்து சாந்தனு ஹசாரிகா தெரிவித்துள்ளார்.

ஸ்ருதி ஹாசன் மற்றும் சாந்தனு ஹசாரிகா இருவரும் 2020ம் ஆண்டு ஒருவரையொருவர் காதலித்து வந்ததாக தகவல் வெளியானது. அவர்கள் இருவரும் ஜோடியாக இருக்கும் புகைப்படங்களும் வெளியாகி வைரலானது. இந்நிலையில், இருவரும் ஏற்கெனவே திருமணம் செய்து கொண்டதாக சாந்தனு தெரிவித்துள்ளார்.

டூடுல் கலைஞரும் ராப் பாடகருமான சாந்தனு, ஸ்ருதி ஹாசனுடனான தனது உறவைப் பற்றி அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். ஹிந்துஸ்தான் டைம்ஸ் உடனான சமீபத்திய பேட்டியில், ஸ்ருதி ஹாசனுடனான உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளீர்களா என்று சாந்தனுவிடம் கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், ''நாங்கள் ஏற்கெனவே க்ரியேட்டிவாக திருமணமானவர்கள்தான். எங்களுடைய பந்தம் எவ்வளவு உறுதியானது என்பதை காட்டுவதற்கும் நாங்கள் எங்கள் தொழிலில் செய்யும் புதுமையான விஷயங்களே சாட்சி. சொல்லப்போனால் நாங்கள் இருவரும் இணைந்து புதுமையான விஷயங்களை மீண்டும் மீண்டும் செய்வதில் அதிக ஆர்வம் கொண்டவர்களும்கூட! உண்மையில் புதுமையாக - க்ரியேட்டிவாக இருப்பதுதான் எங்கள் இருவருக்கும் ரொம்பவும் முக்கியம்.

இருப்பினும் திருமணம் என்று கேட்கையில், அதுபற்றி எனக்கு பெரிதாக எதுவும் தெரியவில்லை. ஆகவே போகப்போக நிலைமை எப்படி மாறுகிறது என பார்ப்போம்” என்றார்

ஸ்ருதி ஹாசனும் சாந்தனு ஹசாரிகாவும் 2018 ஆம் ஆண்டிலிருந்து ஒருவரையொருவர் பரிட்சயமானவர்கள். இருப்பினும், இந்த ஜோடி 2020 இல் டேட்டிங் செய்யத் தொடங்கியது. கோவிட்-19 தொற்றுநோய்களின் போது, அவர்கள் மும்பையில் உள்ள ஸ்ருதியின் வீட்டில் ஒன்றாக வாழத் தொடங்கியது குறிபிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com