காதலருடன் பிரிமீயர் ஷோவில் கலந்துகொண்ட ஸ்ருதிஹாசன்!
இந்திப் படத்தின் பிரிமீயர் ஷோவில் காதலருடன் கலந்துகொண்டார் நடிகை ஸ்ருதி ஹாசன்.
நடிகை ஸ்ருதிஹாசனும் பிரிட்டீஸ் நாடக நடிகருமான மைக்கேல் கோர்சேலும் காதலித்து வருவதாக கடந்த சில வருடங்களாக கூறப்பட்டு வருகிறது. இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் லண்டனில் இருந்து நேற்று மும்பை வந்த மைக்கேலை ஸ்ருதி வரவேற்று காரில் அழைத்துச் சென்றார். இருவரும் கட்டியணைத்து அன்பை பரிமாறிக்கொண்ட காட்சியை மும்பை மீடியா படம் பிடித்துள்ளது. இதுபற்றி மும்பை சினிமா வட்டாரத்தில், ‘மைக்கேல் கோர்சேல் அடுத்த திங்கள்கிழமை வரை இங்குதான் இருக்கிறார். இருவரும் கமலை ஏற்கனவே சந்தித்து திருமணம் பற்றி பேசிவிட்டனர்’ என்று கூறப்பட்டது.
இந்நிலையில் இந்திப் பட இயக்குனர் திக்மன்ஷூ துலியா இயக்கியுள்ள ராக்தேஷ் பட பிரீமியர் மும்பையில் நேற்று நடந்தது. இதில் தனது காதலர் மைக்கேலுடன் ஸ்ருதிஹாசன் கலந்துகொண்டார். இவர்கள் இருவரையும் இந்தி திரையுலகினர் ஆச்சரியமாகப் பார்த்தனர். பின்னர் வாழ்த்துத் தெரிவித்தனர்.