Masakazu Hashimoto
Masakazu HashimotoShin Chan: The Spicy Kasukabe Dancers in India, Muthu

ரஜினியின் `முத்து' படத்தை சிலாகிக்கும் `ஷின் சான்' இயக்குநர்! | Shin chan|Muthu | Masakazu Hashimoto

இந்தப் படத்தின் கதைக்களமே, ஷின் சான் கதாப்பாத்திரம் ஒரு நடனப் போட்டிக்காக அவனது நண்பர்களுடன் இந்தியா வரும் போது காசுகாபே என்ற தீய சக்தியை எதிர்த்துப் போராடுவதாக அமைக்கப்பட்டுள்ளது.
Published on

உலகளவில் மிகப்பெரிய வெற்றிபெற்ற அனிமேஷன் தொடர் ஷின் சான். இந்தியாவிலும் லாக்-டவுன் சமயத்தில் இந்த தொடரின் தமிழ் டப்பிங் மிகப்பிரபலமானது. 5 வயது சிறுவனின் வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களை கதைக்களமாக கொண்ட இந்த தொடர் வயது வித்தியாசம் இன்றி அனைவரும் ரசிக்கும்படியான காமெடி தொடராக கவர்ந்தது.

இந்த சூழலில் ஷின் சான் பாத்திரத்தை மையமாக வைத்து `ஷின் சான்: தி ஸ்பைசி கசுகபே டான்சர்ஸ் இன் இந்தியா' (Shin Chan: The Spicy Kasukabe Dancers in India) என்ற அனிமேஷன் திரைப்படம் 26ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ஜப்பானிய மொழியில் தயாராகியுள்ள இப்படம், இந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் டப் செய்யப்பட்டும் வெளியாகிறது.

இப்படத்தை இந்தியாவில் பிரபலப்படுத்த பல முயற்சிகள் நடக்கிறது. ஏனென்றால் இந்தப் படத்தின் கதைக்களமே, ஷின் சான் கதாப்பாத்திரம் ஒரு நடனப் போட்டிக்காக அவனது நண்பர்களுடன் இந்தியா வரும் போது காசுகாபே என்ற தீய சக்தியை எதிர்த்துப் போராடுவதாக அமைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் டெல்லி வந்திருந்த இப்படத்தின் இயக்குநர் மசகாசு ஹாஷிமோடோ (Masakazu Hashimoto) படம் பற்றி பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

ஷின் சான் ஒரு கார்டூனாக மிகப்பிரபலம் அடைந்திருந்தாலும், அதன் உள்ளடக்கத்தில் பல எல்லை மீறல்கள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது பற்றியும், ஷின் சான் கதாப்பாத்திரத்தில் நடந்த மாற்றங்கள் பற்றியும் கேள்வி எழுப்பப்பட, "இந்தியாவில் தணிக்கை பிரச்சினைகள் பற்றி எனக்குத் தெரியாது, ஆனால் ஷின் சான் இத்தனை ஆண்டுகளில் நிறையவே மாறி இருக்கிறான். ஜப்பானில், தணிக்கை இல்லை என்றாலும், குழந்தைகளுக்கு எது உகந்தது என்பதில் கட்டுப்பாடு உள்ளது. அது குழந்தைகளைப் பாதுகாப்பதனால் மோசமானதாகக் கருத அவசியமில்லை.

Shin Chan
Shin ChanShin Chan

உதாரணமாக, ஷின் சான் குழந்தைகளின் ஹீரோ என்பதால், அவர் செய்யும் அனைத்தும் அவர்களால் நகலெடுக்கப்படுகின்றன. எனவே கார்டூனில் கதாப்பாத்திரங்களின் பின்புறங்களைக் காட்ட வேண்டாம் என்று நான் கூறி இருக்கிறேன். எனக்கும் இப்போது குழந்தைகள் உள்ளனர். இந்த மாற்றங்கள் நன்மைக்காகவே என்று நான் நினைக்கிறேன்." என்றார்.

இந்தியாவைப் பொறுத்தவரை, பிற மொழிகளில் இருந்து வரும் அனிமேஷன் படங்கள் நல்ல வரவேற்பு கிடைத்தாலும், இங்கு உருவாக்கப்படும் அனிமேஷன் படங்களுக்கு (மஹாவதார் நரசிம்மா தவிர) அப்படியான வரவேற்பு இருப்பதில்லையே. இதற்கான காரணம் என்ன எனப் பார்கிறீர்கள் எனக் கேட்கப்பட, "பல காரணங்கள் உள்ளன. உதாரணமாக, ஜப்பானிய அனிமேஷன், உலகளாவிய பார்வையாளர்களுக்கு சென்று சேரும் என்பதை தயாரிப்பாளர்கள் நன்கு அறிவார்கள், எனவே இது மிக உயர்ந்த தரத்தில் உள்ளது. இந்தியாவை பொறுத்தவரை, ஜப்பானிய கன்டென்ட் மட்டுமல்ல, இந்திய பார்வையாளர்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக உள்ள பிற சர்வதேச கன்டென்ட்களும் கிடைக்கிறன" என்றார்.

மேலும் இந்திய சினிமா குறித்து மசகாசு பேசுகையில் "நான் பார்த்த முதல் இந்தியப் படம் Muthu: The Dancing Maharaja (ரஜினிகாந்த் நடித்த 1995 முத்து திரைப்படம் ஜப்பானில் மிக பிரபலம்). அப்போதிருந்து ஷின் சானுக்கு இந்தியா ஒரு நல்ல பொருத்தமான இடமாக இருக்கும் என்று நினைத்தேன். நான் அவனை இந்தியாவுக்கு வரச் செய்வதால், இங்குள்ள இடங்களை பார்வையிட முடியும் எனவும் எனக்குத் தெரியும்" என்றார்.

Masakazu Hashimoto
`OG' முதல் ஓடிடியில் மோகன்லாலின் `Hridayapoorvam' வரை... இந்த வார ஓடிடி, தியேட்டர் லிஸ்ட் இதோ!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com