Adam Bernstein, Giacomo Martelli இயக்கியுள்ள சீரிஸ் `Hotel Costiera'. முன்னாள் கடற்படை அதிகாரி டேனியல் தன் சொந்த ஊருக்கு திரும்புகிறார். அங்கு அவர் சந்திக்கும் பிரச்சனையே கதை.
சச்சின்ரா இயக்கியுள்ள சீரிஸ் `Janaawar'. ஹேமந்த் குமார் என்ற காவலதிகாரி விசாரிக்கும் ஒரு வழக்கே கதை.
Matthew Heineman இயக்கியுள்ள சீரிஸ் `The Savant'. ஒரு கலவரத்தை தடுக்க முயலும் ஆய்வாளரின் கதை.
William Bridges இயக்கியுள்ள படம் `All of You'. ஒரு காதல் ஜோடிக்குள் வரும் சிக்கல்களே கதை.
வெங்கடேஷ் இயக்கத்தில் நர ரோஹித், ஸ்ரீதேவி, வ்ரிதி நடிப்பில் உருவான படம் `Sundarakanda'. வயதில் மூத்த மற்றும் வயதில் இளைய என இரு பெண்கள் மீது காதல் கொள்ளும் இளைஞனின் கதை.
சத்யன் அந்திக்காட் இயக்கத்தில் மோகன்லால் நடித்த படம் `Hridayapoorvam'. தனக்கு இதய தானம் அளித்தவரின் வீட்டுக்கு செல்லும் ஹீரோ, அங்கு தங்கும்படி ஆகிறது. அதன் பின் நடப்பவையே கதை.
தமர் இயக்கியுள்ள படம் `Sarkeet'. பாலு - ஸ்டெஃபி தம்பதியின் குழந்தை வளர்ப்பில் வரும் சவாலும், அதை அவர்கள் எதிர்கொள்ளுவதுமே கதை.
Sean Byrne இயக்கிய படம் `Dangerous Animals'. சீரியல் கில்லர் ஒருவனிடம் சிக்கிக் கொள்ளும் ஒரு பெண்ணின் கதை.
சுந்தர் இயக்கத்தில் வினீத், ஸ்ரீ ஸ்வேதா நடித்துள்ள படம் `அந்த 7 நாட்கள்'. காதலுக்காக ஒரு மனிதன் செல்லும் எல்லை என்ன என்பதை பற்றிய படமாக உருவாகி இருக்கிறது.
வினீத் ஸ்ரீனிவாசன் இயக்கியுள்ள படம் `Karam'. ஒரு ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகியிருக்கிறது.
சுஜீத் இயக்கத்தில் பவன்கல்யாண் நடித்துள்ள படம் `They Call Him OG'. ஓஜாஸ் கம்பீரா என்ற கேங்க்ஸ்டர் திரும்பி மும்பை வந்த பிறகு என்ன நடக்கிறது என்பதே கதை.
சுப்ரமணியன் இயக்கத்தில் நடராஜ் நடித்துள்ள படம் `ரைட்'. தொலைந்த தன் மகனைத் தேடும் தந்தை, ஒரு காவல் நிலையத்தில் மாட்டிக் கொண்ட பின் என்ன நடக்கிறது என்பதே கதை.
கஜேந்திரா இயக்கத்தில் ரிஷி ரித்விக் நடித்துள்ள படம் `குற்றம் தவிர்'. தன் அக்காவின் மரணத்திற்கு பின் இருப்பவர்களை பழி வாங்கும் தம்பியின் கதை.
உன்னி சிவலிங்கம் இயக்கத்தில் ஷேன் நிகம், சாந்தனு, ப்ரீத்தி நடித்துள்ள படம் `Balti'. கபடியை மையப்படுத்தி உருவாகியுள்ள படம்.
நீரஜ் கெய்வான் இயக்கத்தில் இஷான் கட்டர், ஜான்வி கபூர், விஷஜால் ஜெத்வா நடித்துள்ள படம் `Homebound'. காவலர்களாக ஆசைப்படும் இரண்டு நண்பர்களுக்கு தடையாக சாதி வருவதே கதை.
Paul Thomas Anderson இயக்கத்தில் டிகாப்ரியோ நடித்துள்ள படம் `One Battle After Another'. புரட்சிக்காரர்கள் குழு ஒன்று 16 வருடங்களுக்கு பிறகு, மீண்டும் வந்திருக்கும் எதிரியை அழிக்க இணைகிறது. அதன் பின் நடப்பவையே கதை.