“சிகிச்சைகாக 25 கோடி ரூபாய் கடன் வாங்கினேனா?” - சமந்தா ஷார்ப் பதில்!

நடிகை சமந்தா தெலுங்கு நடிகரொருவரிடம் ரூ.25 கோடி கடன் வாங்கியதாக பரவிய தகவலுக்கு, இன்ஸ்டா மூலம் பதிலளித்துள்ளார்.
Samantha
Samanthapt web

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. கடந்த வருடம் தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டார் இவர். தொடர் சிகிச்சை மேற்கொண்டு அதிலிருந்து அவர் மீண்ட நிலையில் அவர் நடிப்பில் யசோதா திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் சமந்தா, விஜய் தேவரகொண்டா நடிப்பில் குஷி திரைப்படம் திரைக்கு வர தயார் நிலையில் உள்ளது.

Samantha
“என் பக்கம் தவறே இல்லாதபோது, நான் ஏன் குற்ற உணர்வோடு இருக்கணும்?” - விவாகரத்து பற்றி சமந்தா Open Talk!
Samantha
Samantha

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் இணையத்தில் ‘தெலுங்கு சினி உலகை சேர்ந்த ஒரு நடிகரிடமிருந்து, மயோசிடிஸ் நோய் சிகிச்சைக்காக சமந்தா ரூ.25 கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளார்’ என தகவல் வெளியானது. இந்த தகவலுக்கு சமந்தா தற்போது ரிப்ளை கொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக தன் இன்ஸ்டா ஸ்டோரியில் சமந்தா, “மயோசிடிஸ் நோய் சிகிச்சைக்கு 25 கோடியா? நான் அதில் மிகக்குறைவான அளவு பணத்தைத்தான் என் சிகிச்சைக்காக பயன்படுத்தியுள்ளேன் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

என்னாலேயே என்னை நல்லபடியாக கவனித்துக் கொள்ள முடியும். மயோசிடிஸ் நோயினால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே சிகிச்சை தொடர்பாக தகவல்களை வெளியிடும் போது பொறுப்புடன் இருங்கள்” என தெரிவித்துள்ளார். சமந்தாவின் இந்த பதில் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com