\
Samantha Ruth Prabhu Reveals Her Non Negotiable Morning Routine
நடிகை சமந்தாஇன்ஸ்டா

”மொத 3 மாசம் கஷ்டம்..” - ரகசியத்தைச் சொல்லும் நடிகை சமந்தாவின் டைரிக்குறிப்பு!

நடிகை சமந்தார், தனது தாய்மைப் பயணம் குறித்த தகவல்களையும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் பகிர்ந்துவருகிறார். அந்த வகையில், தனது காலை நேரப் பழக்கவழக்கங்கள் குறித்து தற்போது பேசியுள்ளார்.
Published on: 

தமிழ் சினிமா மட்டுமல்லாது, தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிப் படங்களிலும் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் கடந்த ஆண்டு பிரபல இயக்குநர் ராஜ் நிடிமோருவைத் திருமணம் செய்துகொண்டார். மேலும், அவர் தற்போது கர்ப்பமாக இருக்கிறார். மேலும், தனது தாய்மைப் பயணம் குறித்த தகவல்களையும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் பகிர்ந்துவருகிறார். அந்த வகையில், தனது காலை நேரப் பழக்கவழக்கங்கள் குறித்து தற்போது பேசியுள்ளார். இதுகுறித்து அவர், "நான் எழுந்தவுடன் முதலில் செய்வது டைரி (gratitude journal - நன்றி உணர்வு நாட்குறிப்பு) எழுதுவதுதான்; ஒரு பக்கம் முழுவதும் நன்றி உணர்வை வெளிப்படுத்தும் விஷயங்களை எழுதுவேன்.

பலர் இதை ஒருவித அதிருப்தியுடன் பார்த்து, 'சே! நிஜமாவா' என்று கேட்பது எனக்குத் தெரியும். இருப்பினும், இந்தப் பழக்கம் தனது மனநிலையை மாற்றியமைத்துள்ளது; எனவே, இதை மற்றவர்களும் பின்பற்ற வேண்டும். தான் ஒரு மிகவும் கடினமான காலகட்டத்தைக் கடந்து கொண்டிருந்தபோது, ​​நன்றி உணர்வு நாட்குறிப்பை பராமரிக்குமாறு தனக்கு அறிவுறுத்தப்பட்டது.

Samantha Ruth Prabhu Reveals Her Non Negotiable Morning Routine
’நான் கர்ப்பமாக இருப்பது ஒரு சர்ப்ரைஸ்..’ சமந்தா பகிர்ந்த விசயம்!

முதலில், இந்த நாட்குறிப்பில் நேர்மறையான விஷயங்களை எழுதுவது எனக்கு மிகவும் கடினமாக இருந்தது; ஏனெனில், அப்போது நான் அப்படிப்பட்ட மனநிலையில் இல்லை. எனது மனநிலை காரணமாக, முதல் மூன்று மாதங்களுக்கு எதையும் நேர்மறையாக எழுதுவது எனக்குச் சவாலாக இருந்தது. ஆனால், சிறிது காலத்திற்குப் பிறகு, தனது உடல்நிலை பெரிய அளவில் மேம்படாவிட்டாலும், தனது மனநிலை மாறியிருப்பதை அறிந்தேன்.

இது, நம்பமுடியாத தாக்கத்தை ஏற்படுத்தியது. இது தவிர, சூரிய ஒளியில் சிறிது நேரம் இருப்பதையும் தியானம் செய்வதையும் வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். எழுந்தவுடன் 15 முதல் 20 நிமிடங்கள் வரை காலைச் சூரிய ஒளியில் செலவிடுகிறேன். மன அழுத்தத்தைக் குறைக்கவும், கவனத்தைக் குவிக்கவும் தினமும் காலையில் பிராணாயாமம் போன்ற மூச்சுப் பயிற்சிகள் மற்றும் தியானத்தில் ஈடுபடுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Samantha Ruth Prabhu Reveals Her Non Negotiable Morning Routine
"ஹீரோயின் படம் யார் பார்ப்பாங்கனு கேட்டாங்க.." - மாஸ் ஹிட் கொடுத்த சமந்தா பதிவு | Samantha
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com