இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார்
இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார்முகநூல்

’வதந்திகளை பரப்புவது வேதனையாக உள்ளது; எங்கள் 24 வருட நட்பு மீண்டும் தொடரும்’! - சைந்தவி பதிவு!

விவகாரத்து பெறப்போவதாக அறிவித்த இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் மற்றும் சைந்தவி தம்பதி, தொடர்ந்து நண்பர்களாக தொடருவோம் என தெரிவித்துள்ளனர்.

நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷூம் அவரது மனைவி சைந்தவியும் விவகாரத்து பெறவுள்ளதாக கடந்த சில நாட்களாகவே இணையத்தில் தகவல்கள் பரவிவந்தன. இந்தநிலையில், இருவரும் தங்களது சமூக வலைத்தள பக்கங்களில், தங்கள் பிரிவை அதிகாரப்பூர்வமாக மே 13 ஆம் தேதி இரவு அறிவித்தனர்.

பிரிவை உறுதிசெய்து ஜி.வி.பிரகாஷ் வெளியிட்ட அறிக்கையில், ”11 வருட திருமண உறவில் இருந்து நாங்கள் விலகுவதாக முடிவு செய்திருக்கிறோம். எங்களின் மன அமைதிக்காகவும், நன்மைக்காகவும் இந்த முடிவை இணைந்து எடுத்துள்ளோம். இந்த நேரத்தில் நண்பர்களும், ரசிகர்களும் எங்களது தனிப்பட்ட வாழ்க்கையை மதிக்க வேண்டும். இந்த முடிவு எங்களது இருவருக்கும் சிறந்ததாக அமையும் என்று நம்புகிறோம்” என்று தெரிவித்தார்.

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார்
ஒரே ஆட்டத்தில் வெளியேறிய 2 அணிகள்.. வாழ்வா சாவா ஆட்டமாக மாறிய RCB - CSK போட்டி! LSG-ஐ காலி செய்த DC!

எழுந்த கடுமையான விமர்சனங்கள்.. வேதனை தெரிவித்த ஜி.வி.பிரகாஷ்!

தங்களுடைய தனிப்பட்ட முடிவை நண்பர்களும் ரசிகர்களும் மதிக்கவேண்டும் என ஜி.வி.பிரகாஷ் தெரிவித்தாலும், இருவரின் பிரிவை கடுமையாக விமர்சனம் செய்த பலர் தொடர்ந்து மோசமான பார்வையை வைத்துவருகின்றனர்.

இதனால் மனதுபுண்பட்ட ஜி.வி.பிரகாஷ் மீண்டும் ஒரு பதிவை சமூகவலைதளத்தில் பதிவிட்டு தேவையற்ற கருத்துகளை நிறுத்துமாறு தெரிவித்தார்.

இதுகுறித்து பதிவிட்ட அவர், “புரிதலும், போதுமான விவரங்கள் இல்லாமலும் அனுமானத்தின் பேரில் இரு மனங்கள் இணைவது, பிரிவது குறித்து பொதுவெளியில் விவாதிக்கப்படுது துரதிஷ்டவசமானது. பிரபலமான நபராக இருப்பதாலே ஒருவரின் தனிப்பட்ட வாழ்விற்குள் அத்துமீறி நுழைந்து தரம் தாழ்ந்த விமர்சனங்கள் வைப்பதும் ஏற்புடையதல்ல. தங்களின் கற்பனைக்கு வார்த்தைகள் மூலம் வடிவம் கொடுத்து சமூக ஊடகங்களில் வெளிப்படுத்துவதால் அது "யாரோ ஒரு தனிநபரின்" வாழ்க்கையை பாதிக்கும் என்பதை உணராத அளவுக்கு தமிழர் மாண்பு குறைந்து விட்டதா...?

இருவரும் பரஸ்பரம் ஒப்புக்கொண்டு பிரிந்ததன் பின்னணியையும், காரணங்களையும் என்னுடன் நெருங்கிய பழகிய நண்பர்கள், உறவினர்கள் நன்கறிவார்கள் . அனைவரிடமும் கலந்தாலோசித்து பின்புதான் இருவரும் இந்த முடிவை மேற்கொண்டோம்.

எங்களை பிரபலங்களாக உருவாக்கிய உரிமையிலோ அல்லது என் தனிப்பட்ட வாழ்க்கை மீது தங்களுக்கு இருந்த பேரன்பின் வெளிப்பாடாகவோ தங்களின் ஆதங்கமான விமர்சனங்கள் இருந்தாலும் சம்பந்தப்பட்டவர்களின் மனதை அது மிகவும் காயப்படுத்துகிறது என்பதை உணர்த்தவே இதை பதிவிடுகிறேன். ஒவ்வொரு தனி மனிதரின் நியாயமான உணர்வுக்கும் மதிப்பளியுங்கள். தங்களின் பேரன்புக்கும் ஆதரவுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி" என்று தெரிவித்து வேண்டுகோள் வைத்தார்.

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார்
"டிரென்ட் போல்ட் இல்லை.. அவர் தான் என்னை அதிகம் பயமுறுத்தினார்! 100 முறை பார்ப்பேன்!" - ரோகித் சர்மா

வதந்திகளை பரப்புவது வேதனையாக உள்ளது! - சைந்தவி

ஜி.வி. பிரகாஷ் வெளியிட்ட பதிவிற்கு பிறகு, தன்னுடைய தரப்பில் பதிவிட்டிருக்கும் சைந்தவி இருவருக்கும் இடையேயான நட்பு தொடரும் என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பதிவிட்டிருக்கும் அவர், “பள்ளி காலம் முதல் தொடர்ந்து 24 வருடங்கள் ஜி.வி.பிரகாஷ் உடன் நட்பு தொடர்கிறது. இனி வரும் காலங்களிலும் இருவருக்கிடையே நட்பு தொடரும். தனிப்பட்ட வாழ்க்கை குறித்து ஆதாரமற்ற வதந்திகளை பரப்புவது வேதனையாக உள்ளது. இருவரும் நன்கு ஆலோசித்துதான் விவாகரத்து முடிவு எடுத்தோம்” என பதிவிட்டுள்ளார்.

சைந்தவியின் இந்த பதிவினை பகிர்ந்திருக்கும் ஜி.வி.பிரகாஷ், கடினமான தருணத்தில் துணை நிற்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார்
’CSK-லிருந்து வெளியேறுங்கள்’- இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு Fleming-ஐ குறிவைக்கும் BCCI

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com