லியோ பட நடனக்கலைஞர்கள் சர்ச்சை..என்னது சம்பளம் தரலயா..ஒரே போடாக போட்டு முற்றுப்புள்ளி வைத்த செல்வமணி

லியோ படத்தின் நான் ரெடி தான் பாடலுக்கு நடனமாடிய அனைவருக்கும் வங்கிக்கணக்கில் சம்பளத்தை டெபாசிட் செய்துவிட்டதாக விளக்கம் கொடுத்துள்ளார் FEFSI சங்க தலைவர் ஆர்.கே செல்வமணி.
leo dance issue
leo dance issuePT

லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் தயாராகியுள்ள லியோ படம் வரும் 19ம் தேதி திரைக்கு வருகிறது. திரைக்கு வரும் சூட்டோடு பல சர்ச்சைகளும் லியோ படத்தை சுற்றி சுழன்று வருகின்றன. குறிப்பாக லியோ இசைவெளியீட்டு விழா திடீரென ரத்தானது, ட்ரெய்லரில் இடம்பெற்ற ஆபாச வார்த்தை என்று தொடர்கிறது சர்ச்சை. இந்நிலையில், தங்களுக்கு நடனமாடியதற்காக சம்பளத்தை இன்னமும் கொடுக்கவில்லை என்று நடனமாடியவர்கள் சிலர் போர்க்கொடி தூக்கினர்.

அவர்களின் புகார் தொடர்பான வீடியோக்கள் இணையதளத்தில் வட்டமடிக்கவும் தொடங்கின. சரியாக சாப்பாடு போடவில்லை, சம்பளம் கொடுக்கவில்லை, இனியும் தாமதப்படுத்தினால் போலீஸில் புகார் கொடுப்போம் என்று நடனமாடியவர்களில் வெகுசிலர் புகார்களை அடுக்கினர்.

இந்நிலையில், சம்பளம் கொடுக்கப்படாததாக கூறப்படும் இந்த விவகாரத்தில் FEFSI சங்க தலைவர் ஆர்.கே செல்வமணி அறிக்கை வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். அவரது அறிக்கையில், “சில காணொலிகளில் ‘லியோ’ திரைப்படத்தில் நடன காட்சியில் பங்குப்பெற்றவர்களுக்கு ஊதியம் வழங்கவில்லை என புகார்கள் அளிக்கின்ற காட்சியை பார்த்தோம். ‘லியோ’ திரைப்படத்தின் ஒரு பாடல் காட்சியில் 2,000 நடன கலைஞர்களை வைத்து பாடல் எடுக்க இயக்குநர் திரு.லோகேஷ் கனகராஜ் விருப்பப்படுவதாக அந்த பாடலுக்கு நடன இயக்குநராக பணிபுரிந்த நடன இயக்குநர் தினேஷ் மாஸ்டர் தெரிவித்தார்.

leo dance issue
பற்றி எரியும் பூமி.. கேட்கும் அலறல் சத்தம்.. இஸ்ரேல் - ஹமாஸ் போரின் தற்போதைய நிலவரம் என்ன..?

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தில் (FEFSI) இணைந்துள்ள தமிழ்நாடு திரைப்படம், தொலைக்காட்சி நடன கலைஞர்கள் மற்றும் நடன இயக்குநர்கள் சங்கத்தின் (TANTTNNIS) உறுப்பினர்கள் அதிகபட்சமாக 600 கலைஞர்கள் மட்டுமே இருந்தனர். ஏனெனில், அதிகபட்சமாக 1,000 பேர் உறுப்பினராக உள்ள சங்கத்தில் பல்வேறு படங்களில் ஏறக்குறைய 400 கலைஞர்கள் ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதால் 600 நடன கலைஞர்கள் மட்டுமே இருந்தனர்.

இதுபோன்று அதிகமான நடன கலைஞர்கள் தேவைப்படும்போது முன் வரிசைகளில் நடன கலைஞர்கள் சங்கத்தின் உறுப்பினர்களையும், உறுப்பினர் அல்லாத ஓரளவுக்கு நடனம் தெரிந்த அல்லது அழகான தோற்றம் உள்ள ஆண்கள் / பெண்களை பின் வரிசையில் நிற்க வைத்தும் படமாக்குவது வழக்கம். இவர்கள் ரிச் பாய்ஸ் / ரிச் கேர்ள்ஸ் என்றோ மாடல்ஸ் என்றோ உறுப்பினர் அல்லாதவர் என்றோ அழைக்கப்படுவார்கள். இவர்களுக்கு வழக்கமாக 3 வேளை உணவளித்து கன்வேயன்ஸ் (Conveyance) உட்பட 1,000/- ரூபாய் ஊதியமாக வழங்கப்படும்.

leo dance issue
EXCLUSIVE: “அன்னைக்குனு Black.. அதுவும் மீடியா இருக்குற பக்கம் இறங்கிட்டேன்” - வானதி சீனிவாசன்

‘லியோ’ திரைப்படத்தில் 1,400 உறுப்பினர்கள் அல்லாதவர்கள் சென்னை பனையூரில் உள்ள "ஆதி ஸ்ரீராம்" ஸ்டுடியோசில் கடந்த ஜீன் மாதம் 06.06.2023 முதல் 11.06.2023 வரை 6 நாட்கள் பாடல் காட்சி படப்பிடிப்பு நடைபெற்றது. இவர்களுக்கு, உறுப்பினர் அல்லாதவர்களுக்கு என்ன ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் சங்கத்தில் விவாதிக்கப்பட்ட போது ஊதியம் + பேட்டா கன்வேயன்ஸ் உட்பட ஒரு உறுப்பினருக்கு நாளொன்றுக்கு ரூ.1,750/- வீதம் 6 நாட்களுக்கு ரூ.10,500/- ரூபாய் வழங்குவதென முடிவு செய்யப்பட்டது.

இதன்படி, அனைத்து உறுப்பினர்களுக்கும் அவரவர் வங்கிக்கணக்கில் நேரடியாக 94,60,500/- ரூபாய் மொத்தம் செலுத்தப்பட்டது. அது மட்டுமின்றி இவர்களுக்கு ரிகர்சல் அளித்து ஒழுங்குப்படுத்தும் விதமாக சர்வீஸ் சார்ஜ் தமிழ்நாடு திரைப்படம், தொலைக்காட்சி நடன கலைஞர்கள் மற்றும் நடன இயக்குநர்கள் சங்கத்திற்கு (TANTTNNIS) தனியாக வழங்கப்பட்டது.

leo dance issue
LEO EXCLUSIVE: "Swimming pool-ல டிஸ்கஸ் பண்ணோம்”- Dialogue Writers ரத்னகுமார் மற்றும் தீரஜ் வைத்தி

தற்போது, ஒரு சிலர் தங்களுக்கு ஊதியம் வழங்கப்பட வேண்டும் என பேட்டியளித்ததை கண்டோம். இது தவறான செய்தியாகும். தமிழ்நாடு திரைப்படம், தொலைக்காட்சி நடன கலைஞர்கள் மற்றும் நடன இயக்குநர்கள் சங்கத்தின் (TANTTNNIS) உறுப்பினர்கள் அனைவருக்கும் சேர வேண்டிய ஊதியம் முழுமையாக அவர்களது சங்கத்தில் செலுத்தப்பட்டுவிட்டது.

அதேபோல் உறுப்பினர் அல்லாதவர்களுக்கு அவரவர் வங்கிக்கணக்கில் தலா ரூ.10,500/- வீதம் (மொத்தம் 6 நாட்களுக்கு) வழங்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் நடனக்கலைஞர்களின் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளியும் வைக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com