review of gentlewoman film
gentlewomanx page

GENTLEWOMAN திரைவிமர்சனம் | பெண் தானே... Softஆ இருப்பாங்கன்னு மட்டும் நினைச்சுடாதீங்க..?

துணைகளைத் தேடும் கணவனுக்கு மனைவி தரும் பாடமே இந்த GENTLEWOMAN கதையின் ஸ்பாய்லர் இல்லாத ஒன்லைன்.
Published on
GENTLEWOMAN(3.5 / 5)

துணைகளைத் தேடும் கணவனுக்கு மனைவி தரும் பாடமே இந்த GENTLEWOMAN கதையின் ஸ்பாய்லர் இல்லாத ஒன்லைன்.

'அன்பான மனைவி , அழகான துணைவி அமைந்தாலே பேரின்பமே' என்கிற பாட்டை தவறாக புரிந்துகொண்ட அரவிந்த்; அன்பான மனைவி , அழகான துணைவி என ஏரியாவுக்கு ஒரு வீட்டை மெயின்டெய்ன் செய்கிறார். இது வெளியே தெரிந்தாலே ஏழரை என்னும் போது வீட்டிற்கு வரும் மனைவின் தோழியிடமும் தவறாக நடக்க முயல்கிறார். அப்போது நிகழும் சில அசாம்பாவிதங்களால் எதிர்பாராமல் சில விஷயங்கள் நடந்துவிடுகிறது. கணவரே கண் கண்ட தெய்வம் என வாழும் மனைவி பூர்ணி என்பதால், இதில் இருந்து எப்படி வெளியே வருவது என யோசிக்கிறார். அரவிந்திற்கு என்ன ஆனது; பூர்ணி சிக்கலில் இருந்து தப்பித்தாரா என்பதே GENTLEWOMAN படத்தின் மீதிக்கதை.

gentlewoman
gentlewomanx page

கணவரே உலகம் என வாழும் பூர்ணியாக லிஜோமோல்ஜோஸ். லிஜோ மோலின் கதைத் தேர்வு வியக்க வைக்கிறது. மீண்டுமொரு அட்டகாசமான ஸ்கிர்ப்ட். தமிழில் லிஜோ மோலுக்கு சிவப்பு மஞ்சள் பச்சை முதல் GENTLEWOMAN வரை எல்லாமே அட்டகாசமான தேர்வுகள் . கிராமத்தில் இருந்து சென்னைக்கு வரும் பெண்ணாக , கணவரே எல்லாம் என வாழும் பெண்களை கண்முன் நிறுத்துகிறார். கணவர் எழுந்துவிட்டாரென காஃபி போட ஓடும் பூர்ணி, ஒரு கட்டத்தில் கேக் ஆர்டர் செய்து நிம்மதியாய் சாப்பிடும் இடம் அழகியதொரு கவிதை. கடந்த மாதம் வெளியான காதல் என்பது பொதுவுடைமை படத்திலும் அந்தக் கதாபாத்திரத்திற்கு என்ன தேவையோ அதைக் கச்சிதமாக வெளிப்படுத்தியிருந்தார். இதிலும் பக்கா. அரவிந்த்தின் காதலி அன்னாவாக லாஸ்லியா. எமோசனல் காட்சிகளிலும், தனக்கு ஏன் அரவிந்த் தேவை என்கிற காட்சிகளிலும் சிறப்பாக நடித்திருக்கிறார். அரவிந்த்தாக ஹரி. பெரிதாக அவருக்கு இந்தக் கதாபாத்திரம் செட்டாகவில்லை.

review of gentlewoman film
THANDEL REVIEW |நிஜ சம்பவத்தை அடிப்படையாக கொண்ட தண்டேல்... எப்படி இருக்கிறது..?

இந்த த்ரில்லர் படத்தின் பெரும்பலம் அதன் வசனங்களும், sitcom டைப் காட்சிகளும் தான். பாதர் வரும் காட்சியாகட்டும், ஆசைப்படுவது தொடர்பாக வரும் வசனங்களாகட்டும் செம்ம ROFLS ரகம். யுகபாரதி & ஜோஷ்வா சேதுராமனின் வசனங்கள் பல இடங்களில் நம்மை சிரிக்க வைக்கின்றன. போரடிக்கும் ஒரே மாதிரியான வாழ்க்கைக்கென சினிமாவில் நிறைய சம்பிரதாய காட்சிகள் உண்டு. படத்தில் அந்தக் காட்சிகளுக்கு கோவிந்த் வசந்தா ஒரு பின்னணி இசையை உருவாக்கியிருக்கிறார். அவ்வளவு பொருத்தமாய் இருக்கிறது.

gentlewoman
gentlewomanx page

பாலிவுட்டின் ஸ்ரீராம் ராகவன் இயக்கும் படங்களுக்கான genreல் தான் GENTLEWOMAN படம் எழுதப்பட்டிருக்கிறது. ஆனால், அதனுள் ஆணாதிக்க சமூகத்தில் பெண்களுக்கு இருக்கும் பிரச்னைகள் போன்றவற்றை அழுத்தமாய் பேசியிருக்கிறார் அறிமுக இயக்குநர் ஜோஷ்வா சேதுராமன். பெரும்பாலும் வீட்டிற்குள் நிகழும் கதைக்களம் தான். ஆனால், அதற்குள் ஒளிப்பதிவில் என்ன என்ன சுவாரஸ்யங்களை சேர்க்க முடியுமோ சேர்த்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் காத்தவராயன். வீடு துடைக்கும் காட்சி, இலையின் பார்வையில் காட்டப்படும் காட்சி என சில காட்சிகள் க்யூட் ரகம்.

எல்லா குற்றங்களுக்கும் குற்றவுணர்ச்சியை எதிர்பார்க்காத சமூகத்தில் தான் வாழ்கிறோம் என்றாலும், ஜஸ்ட் லைக் தட் சில விஷயங்களைக் கடந்து போகவதாக காட்டியிருப்பது நம்பும்படி இல்லை. அதே போல் , அலுவலகத்தில் Annaவை அரவிந்த்தின் நண்பர் டீல் செய்யும் காட்சியும் படத்தோடு ஒட்டவில்லை. இதெல்லாம் சின்ன சின்ன குறைகள் தான்.

இந்த வீக்கெண்டிற்கான நல்லதொரு ஸ்வீட் சர்ப்பைரஸ் படமாக நிச்சயம் GENTLEWOMAN இருக்கும். டோன்ட் மிஸ்..!

review of gentlewoman film
BOTTLE RADHA Review | மதுப்பழக்கத்தின் கோர முகம்.. ‘பாட்டல் ராதா’ படம் எப்படி இருக்கு?
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com