பாட்டல் ராதா
பாட்டல் ராதாமுகநூல்

BOTTLE RADHA Review | மதுப்பழக்கத்தின் கோர முகம்.. ‘பாட்டல் ராதா’ படம் எப்படி இருக்கு?

கட்டட மேஸ்திரி ராதாமணி (குரு சோமசுந்தரம்), பாட்டல் ராதா என அழைக்கப்படும் அளவுக்கு குடி நோயால் பீடிக்கப்பட்டிருக்கிறார். ராதாவின் தொல்லைகளை சகித்துக் கொண்டு, இரு குழந்தைகளுடன் வாழ்க்கையை ஓட்டுகிறார் அவரின் மனைவி (சஞ்சனா நடராஜன்).
Published on

குடியும், குடியின் பொருட்டும் ஒரு மனிதன் சிதைவதும், அவன் அதிலிருந்து மீள எடுக்கும் முயற்சிகளுமே `பாட்டல் ராதா'

கட்டட மேஸ்திரி ராதாமணி (குரு சோமசுந்தரம்), பாட்டல் ராதா என அழைக்கப்படும் அளவுக்கு குடி நோயால் பீடிக்கப்பட்டிருக்கிறார். ராதாவின் தொல்லைகளை சகித்துக் கொண்டு, இரு குழந்தைகளுடன் வாழ்க்கையை ஓட்டுகிறார் அவரின் மனைவி (சஞ்சனா நடராஜன்).

பாட்டல் ராதா
இந்தி எதிர்ப்பும்; கலைஞர் வசனத்தில் புகழ்பெற்ற பட டைட்டிலும்.. தீயாய் வைரலாகும் SK25 படத்தின் பெயர்!

ஆனால் வேலையில் இருந்து துரத்தியடிக்கப்படுவது, போலீஸ் முன் குடும்பத்தாரை கூனி குறுகி நிற்க வைப்பது என அவரது அலும்பு எல்லை மீற, போதை மறுவாழ்வு மையத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்.

தன் குடிநோயில் இருந்து ராதா மீண்டாரா? இதனிடையே அவர் குடும்பத்தார் சந்திக்கும் சிக்கல்கள் என்ன? போதையில் மக்கள் தள்ளப்படுவதன் பின் இருக்கும் அரசியல் என்ன போன்றவற்றை பேசுகிறது படம்.

மது என்பது 'சோஷியல் டிரிங்கிங் ' என்பதை மீறி, நோயாக மாறி பல குடும்பங்களை அழிக்கும் சூழலில், அதைப் பற்றி பொழுதுபோக்குடன் கூடிய விழிப்புணர்வு படத்தை எடுத்திருக்கிறார் இயக்குநர் தினகர் சிவலிங்கம்.

எந்த இடத்திலும் இது மதுவுக்கு எதிரான பிரச்சாரமாக மட்டும் எஞ்சிவிடக் கூடாது என்பதிலும், அதே சமயம் சொல்லும் விஷயத்தின் அழுத்தமும் குறையக்கூடாது என்பதிலும் மிக கவனமாக இருந்திருக்கிறார்.

மேலும், குடியால் ஒரு நபருக்கு உடலில் பிரச்சனைகள் ஏற்படும், மரணம் நிகழும் என்ற அனைவருக்கும் தெரிந்த விஷயங்களை ஹைலைட் செய்யாமல், ஒரு நபரின் தவறான பழக்கம், எப்படி அவரின் குடும்பத்தை பாதிக்கிறது? குடியில் இருந்து மீள முடியாதவர்கள் ஒதுக்கப்பட வேண்டியவர்கள் அல்ல, சிகிச்சை தேவைப்படுபவர்கள் என்பதை முதன்மைப்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.

ஒரு நபரின் தவறான பழக்கம், எப்படி அவரின் குடும்பத்தை பாதிக்கிறது? குடியில் இருந்து மீள முடியாதவர்கள் ஒதுக்கப்பட வேண்டியவர்கள் அல்ல, சிகிச்சை தேவைப்படுபவர்கள் என்பதை முதன்மைப்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.

பாட்டல் ராதா
”என்னுடன் எடுத்த புகைப்படத்தை வைத்து யாராவது ஏமாற்ற நினைத்தால் நம்பாதீர்கள்..” – நடிகர் ராஜ்கிரண்!

நடிப்பு பொறுத்தவரை படத்தில் மிக சிறப்பாக வெளிப்பட்டிருப்பது ராதாவின் மனைவியாக வரும் சஞ்சனா நடராஜன் தான். விருப்பமே இல்லாமல் கணவருடன் படுக்கை பகிர்வதில் துவங்கி, காவலரிடம் கை கூப்பி அழுவது, குழந்தைகளிடம் என்னோட வந்திடறீங்களா? எனக் கேட்பது, மீண்டும் வீட்டுக்கு வரச் சொல்லும் கணவனிடம் கோபத்தை வெளிப்படுத்துவது என இது முழுக்க சஞ்சனாவின் ஷோ.

குரு சோமசுந்தரம் வழக்கம் போல ஒரு கச்சிதமான நடிப்பை வழங்கி இருக்கிறார். இனி குடிப்பதில்லை என மனைவியை சமாதானம் செய்வது, தான் இழந்தவற்றை நினைத்து தவிப்பது என சில இடங்களில் பளிச். அதேசமயம் கதாப்பாத்திரத்தை மீறி, குரு சோமசுந்தரமாக துருத்திக் கொண்டு தெரியும் அவரது Overboard நடிப்பு பல இடங்களில் படத்தை டல்லாக்குகிறது.

விருப்பமே இல்லாமல் கணவருடன் படுக்கை பகிர்வதில் துவங்கி, காவலரிடம் கை கூப்பி அழுவது, குழந்தைகளிடம் என்னோட வந்திடறீங்களா? எனக் கேட்பது, மீண்டும் வீட்டுக்கு வரச் சொல்லும் கணவனிடம் கோபத்தை வெளிப்படுத்துவது என இது முழுக்க சஞ்சனாவின் ஷோ.

மறுவாழ்வு மையத்தில் வரும் ஜான் விஜய் உட்பட பலர் சிறப்பு. மாறனின் கவுன்டர்கள் தான் படத்தை பல நேரம் தொய்வடைய செய்யாமல் நகர்த்துகிறது. பாரி இளவழகன், `மேற்கு தொடர்ச்சி மலை' ஆண்டனி உள்ளிட்டோர் நடிப்பும் கவனிக்க வைக்கிறது.

இப்படத்தின் குறைகள் எனப் பார்த்தல், படத்தை சுவாரஸ்யமாக நகர்த்தும் காட்சிகள் குறைவு என்பதே. துவக்கத்தில் கதாப்பாத்திரங்களின் அறிமுகங்கள், பிரச்னைகள் போன்றவை சொல்லப்பட்டு, மறுவாழ்வு மைய காட்சிகள் இடைவேளை வரை ஓரளவு சுவாரஸ்யமாக நகரும் கதை, இரண்டாம் பாதியில் தேங்கிவிடுகிறது. குடி நோயாளிகளின் உளவியல் பிரச்சனையை மேலோட்டமாக கடந்துவிட்டு, வசனங்கள் மூலமாக அதைக் கடத்த முற்படுவதும் எடுபடவில்லை. ஒரு பிரச்னை சொல்லப்பட்ட பின்னும் மீண்டும் மீண்டும் அதையே காட்டிக் கொண்டிருப்பதும் அலுப்பை ஏற்படுத்துகிறது. ஷான் ரோல்டனின் பின்னணி இசை படத்துக்கு வலு சேர்த்தாலும் பாடல்களாக பெரிய அளவு ஈர்க்கவில்லை. மேலும் படத்தில் பாடல்கள் புகுத்தப்பட்ட இடங்களும் அவ்வளவு பொருத்தமாக இல்லை.

குடி நோயாளிகளின் உளவியல் பிரச்சனையை மேலோட்டமாக கடந்துவிட்டு, வசனங்கள் மூலமாக அதைக் கடத்த முற்படுவதும் எடுபடவில்லை

பாட்டல் ராதா
குடும்பஸ்தன் | பாட்டல் ராதா | Mr Housekeeping | விடுதலை 2 - தியேட்டர், OTT-ன் இந்த வார ரிலீஸ் லிஸ்ட்

மொத்தத்தில், குடும்பங்களை அழிக்கும் குடியைப் பற்றி தீவிரம் குறையாமல் பேசி இருக்கும் படம். குறைகள் இன்னும் மேம்பட்டிருக்க வேண்டியவை இருக்கிறதுதான். ஆனால் குடி நோயாளிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் அளவு முக்கியமான படமாக `பாட்டல் ராதா'வை கொடுத்திருக்கும் இயக்குநரை தாராளமாக பாராட்டலாம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com