அஜித் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி! இன்றுஇரவு ’விடாமுயற்சி’ பட டீசர் ரிலீஸ்.. வெளியான குஷியான தகவல்!
நடிகர் அஜித்குமார் - இயக்குநர் மகிழ் திருமேனி கூட்டணியில் உருவாகியிருக்கும் திரைப்படம் ’விடாமுயற்சி’. த்ரிஷா, அர்ஜூன், ரெஜினா கசன்ட்ரா, ஆரவ் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கும் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். லைகா நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு நிரவ் ஷா மற்றும் ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவும், என். பி. ஸ்ரீகாந்த் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.
மீகாமன், தடையறத்தாக்க, தடம், கலகத்தலைவன் போன்ற திரைப்படங்களை இயக்கியிருக்கும் மகிழ் திருமேனி, க்ரைம் த்ரில்லர் கதைகளை எடுப்பதில் பெயர்போனவர் என்பதால் ’விடாமுயற்சி’ படத்தின் மீது எதிர்ப்பார்ப்பு அதிகமாகவே இருந்துவருகிறது.
இந்நிலையில் எதாவது அப்டேட் விடுங்கப்பா என காத்திருந்த அஜித் ரசிகர்களுக்கு, தற்போது படத்தின் டீசர் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
இன்று வெளியாகவிருக்கும் விடாமுயற்சி டீசர்..
விடாமுயற்சி டீசர் குறித்து வெளியாகியிருக்கும் தகவலின் படி, அஜித் நடித்திருக்கும் விடாமுயற்சி படத்தின் டீசர் இன்று இரவு 11.08 PM மணிக்கு, சன் டிவி யூடியூப் சேனலில் வெளியாகும் என தெரியவந்துள்ளது.
இந்த அப்டேட்டை அஜித் ரசிகர்கள் எக்ஸ் தளத்தில் டிரெண்ட் செய்து வருகின்றனர். விடாமுயற்சி திரைப்படமானது வரும் ஜனவரி மாதம் பொங்கலன்று வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.